மேலும் அறிய

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நள்ளிரவில் கதறிய குடும்பம்! நிலத்தகராறில் பரபரப்பு, அதிகாரிகள் அதிர்ச்சி!

"காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து, குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது"

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பட்டா இடத்தில் வீடு கட்டும் கட்டுமான வேலைகளை தடுத்து நிறுத்தியதாக கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாய் தலைகாணியுடன் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நிலப் பிரச்சனை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அருகே சித்தனக்காவூர் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கன்னியப்பன், லட்சுமி தம்பதியினர். இவர்கள் வாசுதேவன், வசந்த் ஆகிய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் வசித்து வந்த வீடு சிறியதாக இருந்த நிலையில் அதனை அகற்றி பட்டா இடத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்க்ரீட் வீடு கட்டுமான வேலைகளை செய்து வந்துள்ளனர். அதில், வீட்டு அருகே கன்னியப்பன் அனுபவத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு கொஞ்சம் இடத்தையும் சேர்ந்து, கன்னியப்பன் வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.

வீடு கட்டுவதற்கு மற்றொரு நபர் எதிர்ப்பு 

இந்நிலையில் அதே கிராமத்தில் கன்னியப்பன் வீட்டு பக்கத்து தெருவில் வசித்து வரும் நபர் ஒருவர் அந்த நத்தம் புறம்போக்கு இடம் தங்களுக்கு சொந்தம் என்று, கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வீடு கட்டுவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கன்னியப்பன் வீட்டில் தொழிலாளர்கள் ரூப் ஜல்லி போடும் கட்டுமான பணிகளை செய்து கொண்டு இருந்தபோது, எதிர் தரப்பினர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்ததின் பேரில், வட்டாட்சியர் உத்தரவின் படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவி அலுவலர் ஆகியோர் கன்னியப்பன் வீடு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

இச்சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த கன்னியப்பன் லட்சுமி தம்பதியினர் வருவாய் துறையினர் வீடு கட்டுமான பணிகளை நிறுத்தியதால், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை கன்னியப்பன், லட்சுமி, வாசுதேவன் வசந்த் ஆகிய குடும்பத்தினர் நான்கு பேரும் முற்றுகையிட்டு, எதிர் தரப்பு நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வாரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம் 

சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தாருடன் பாய், தலைகாணி உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இரவு நேரத்தில் அலுவலகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, 

தகவல் அறிந்து சார் ஆட்சியர் ஆசிக் அலி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் அலுவலகத்திற்கு வருகை தந்து உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுபட்டிருந்த குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அங்கிருந்து கலந்து சென்றனர். நள்ளிரவில் குடும்பத்தினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ‌

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
சுதந்திரத்திற்குப் பின் முதல்முறையாக கிராமத்திற்குள் நுழைந்த அரசு பேருந்து! கொண்டாட்டத்தில் கிராம மக்கள்!
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget