மேலும் அறிய

புயல் எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் 3000 கன அடி நீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

Chembarambakkam Lake: "புயல் எதிரொலியால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது"

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதா வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 2400 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3845 மில்லியன் கன அடியாகும்.

வானிலை மைய முன்னரிவிப்பின் படி வரக்கூடிய மழை அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதை தவிர்க்க படிப்படியாக சென்னையின் தாழ்நிலை பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து 17.11.2025 காலை 8.00 மணி அளவிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டு 20.11.2025 அன்று முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னர் குடிநீர் வழங்கல் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்க கொள்ளளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது.

இன்றைய (29.11.2025) நிலவரப்படி நீர் இருப்பு 2156 அடியாகவும், கொள்ளளவு 3002 மில்லியன் கனஅடியாகவும் (8230% உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து பிற்பகல் 04.00 மணி நிலவரப்படி 150 கனஅடியாக உள்ளது.

கனமழை எச்சரிக்கை

இந்நிலையில் இந்திய வாநில மையம் தற்பொழுது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்த முன்னறிவிப்புகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 28.11.2025. 29.11.2025 மற்றும் 30.112025 ஆகிய நாட்களில் சென்னை குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் பிடிப்பு பகுதியில் மழையின் அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும் முன்னெச்சரிக்கையாக நீர்த்தேக்கங்களின் தற்போதைய கொள்ளளவை குறைக்கும் நடவடிக்கையாக (Pre Empty) ஏரியிலிருந்து 29.11.2025 பிற்பகல் 200 மணி அளவில் வினாடிக்கு 2000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இன்று 29.11.2025 மாலை 6.00 மணி அளவில் விநாடிக்கு 2500 கன கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இரவு 8.00 மணி அளவில் வினாடிக்கு 3000 கன அடியாகவும் உபரி நீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள. இந்த நீர் வெளியேற்றம் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் புயலின் நகர்வினை பொறுத்து அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ள அபாய எச்சரிக்கை :

இந்த நடவடிக்கையின் மூலம் நீர்த்தேக்கத்தின் போதிய அளவு வெள்ள தாங்கு திறன் அதிகரிக்கப்பட்டு அதி மழை பொழியும் காலத்தின் உச்ச வெள்ளத்தினை நீர்த்தேக்கத்தில் தாங்கி, சென்னை மாநகருக்குள் ஆற்றின் வெள்ள ஓட்டத்தினை மட்டுப்படுத்த வழி வகை செய்யப்படுகிறது.

எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர். காவனூர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Embed widget