மேலும் அறிய
Advertisement
ஐபிஎல்: கொல்கத்தா அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் மட்டுமே எடுத்தது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரானா 80, ராகுல் திரிபாதி 53, தினேஷ் கார்த்திக் 22 ரன் எடுத்தனர்.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன் , பேர்ஸ்டோவ் 55 ரன் குவித்தனர்.
ஹைதராபாத் அணி தரப்பில் முகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகள், புவனேஷ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட் எடுத்தார்.
இன்று இரவு 7-30 மணிக்கு மும்பையில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion