Zomato Layoff: பணியாளர்களுக்கு விரைவில் "குட் பை" சொல்லப் போகும் ஜோமெட்டோ...! என்ன காரணம்..?
Zomato நிறுவனம் தனது மொத்த தொழிலாளர்களில் குறைந்தபட்சம் 4% குறைக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Zomato நிறுவனம் தனது மொத்த தொழிலாளர்களில் குறைந்தபட்சம் 4% குறைக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பணி நீக்கம்:
தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பிரிவுகளில் குறைந்தது 100 பணியாளர்கள் ஏற்கனவே இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சொமேடோ நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் குறைந்தது 4 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பெருகி வரும் மேக்ரோ சூழலில், உணவு விநியோக தளமான Zomato செலவுகளைக் குறைத்து அதிக லாபம் ஈட்டுவதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பிரிவுகளில் குறைந்தது 100 பணியாளர்கள் பணீ நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், விநியோகச் பிரிவுல் (delivery department) உள்ளவர்கள் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
என்ன காரணம்..?
தனது மொத்த பணியாளர்களில் குறைந்தது 4 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. zomato நிறுவனத்தில் தற்போது இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பதாலும் இந்த பணி நீக்கம் அவசியமாக உள்ளது என்கின்றனர். Zomato நிறுவனர் மற்றும் CEO தீபிந்தர் கோயல் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு நிறுவனம் செயல்படாததால் இனி வரும் காலங்களில் பணி நீக்கம் இருக்கும் என குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் கிளவுட் கிட்ச்சன் (cloud kitchen) மேற்கொண்டு வந்த சிலர் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரங்களில் நிறுவனத்திலிருந்து மூன்று உயர்மட்ட நிலை ஊழியர்கள் வெளியேறிய பிறகு பணிநீக்கங்கள் விரைவில் நடைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Zomato வின் இணை நிறுவனர் மோஹித் குப்தா, புதிய முயற்சிகளின் தலைவர் ராகுல் கஞ்சூ மற்றும் இன்டர்சிட்டி தலைவர் சித்தார்த் ஜெவார் ஆகியோர் ராஜினாமா செய்தனர், இது அந்த நிறுவனத்தின் ஸ்திரத்தண்மையை கேள்விக்குறியில் தள்ளியுள்ளது.
பெருநிறுவனங்கள் :
இதே போல் சமீபத்தில் பல நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யத்தொடங்கியுள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரரும் பில்லியனருமான எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது முதல், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் வேலை மற்றும் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற மனநிலையுடனும் விரக்தியுடனும் வலம் வருகின்றனர்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் பல பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டாவர்ஸ் முதலீடுகள் பலனளிக்க சுமார் 10 ஆண்டு காலம் ஆகும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். இதற்கிடையில், அவர் பணியமர்த்தல், ஷட்டர் திட்டங்களை முடக்கி, செலவுகளைக் குறைக்க குழுக்களை மறுசீரமைக்க வேண்டியிருக்கிறது என கூறியிருந்தார். மேலும் ட்விட்ட்ரை தொடர்ந்து மெட்டாவும் பணிநீக்கம் தொடங்கியுள்ளது.
உலகப் பொருளாதாரம் :
மைக்ரோசாப்ட் கார்ப், ட்விட்டர் இன்க் மற்றும் ஸ்னாப் இன்க் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் அதிக வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடி காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி குறைவதால் வேலைகளை குறைத்து, பணியமர்த்துவதை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் பணிநீக்கம் செய்வது அங்கு பணி செய்யும் பணியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.