இந்தியா வந்தாச்சு.. ஆப்கனில் இருந்து வந்த குழந்தையை முத்த மழையில் நனைத்த மழலை.. நெகிழ்ச்சி வீடியோ!
தாலிபான்களின் தாக்குதலிருந்து இந்தியா தப்பித்துவிட்டோம் என்ற சந்தோசத்தில் குழந்தைகள் இருவர் மாறி மாறி முத்தங்களை பகிரும் வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
ஆப்கானிலிருந்து உயிர்தப்பி இந்தியா வந்துவிட்டோம் என்று வார்த்தைகளால் கூற முடியாத இரு குழந்தைகள் தங்களுக்குள் முத்தங்களைப் பரிமாறுக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற்றப்பட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான்கள் தங்களது ஆட்சியை நடத்தத் தொடங்கிவிட்டனர். அந்நேரத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் அங்கிருந்து எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என்று நினைத்து ஏதோ பஸ்களை பிடிப்பதற்கு ஓடுவது போல காபூல் விமானநிலையத்தில் மக்கள் விமானத்தினை பிடிக்க முந்தி அடித்துச்சென்ற காட்சிகள் எல்லாம் பார்ப்போரை பதபதைக்க வைத்தது. தாலிபான்களை ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட அசாதாரண சூழலையடுத்து, இந்தியா, அமெரிக்கா, ஜெர்மன், உள்ளிட்ட அரசுகள் அங்குள்ள அவர்களது நாட்டினரைத் தாயகம் திரும்பி வருவதற்கு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இந்தியாவைப்பொறுத்தவரை கடந்த 15 ஆம் தேதி முதல் இந்தியா விமானப்படை உதவியின் மூலம் இந்தியர்கள் பலர் நாடு திரும்பிவருகின்றனர்.
அந்த வரிசையில் நேற்று சி-17 என்ற இந்திய விமானப்படை போக்குவரத்து விமானம் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 168 ஏற்றி வந்து டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானத்தளத்தில் தரை இறங்கியது. இதில் இந்து மற்றும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பிரபல ஆப்கானிஸ்தான் தலைவர்கள் உள்ளிட்ட 107 இந்தியர்கள் வந்துள்ளனர். மேலும் இந்த விமானத்தில் பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தை ஒன்று பாஸ்போர்ட் இல்லாமல் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தான், தாலிபான்களின் தாக்குதலிருந்து இந்தியா தப்பித்துவிட்டோம் என்ற சந்தோசத்தில் குழந்தைகள் இருவர் மாறி மாறி முத்தங்களை பகிரும் வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. சிறு குழந்தைகளின் கண்களின் தெரியும் அந்த ஆனந்தமே எந்த அளவிற்கு அவர்கள் அங்கு துயரங்களை சந்தித்து இருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
#WATCH | An infant was among the 168 people evacuated from Afghanistan's Kabul to Ghaziabad on an Indian Air Force's C-17 aircraft pic.twitter.com/DoR6ppHi4h
— ANI (@ANI) August 22, 2021
How sweet ! What a respite from the barbarics
— Kavita Naik (@KavitaN97686092) August 22, 2021
It’s a bright spot in the gloom . Also , spare a thought for who couldn’t be evacuated .
— somnath basu (@Basusms) August 22, 2021
இத்தகைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், பல்வேறு கருத்துகளை மக்கள் டிவிட்டர் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் இந்த குழந்தைகளுக்கு வாழ்த்துகள் என்றும், உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்பது போன்ற கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.