உக்ரைனிலிருந்து வந்த திரும்பும் மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்கும்.. அறிவித்த முதலமைச்சர்..
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து மூன்று வாரங்கள் கழிந்துள்ளன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இதுவரை போருக்குப் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையிலான போரை அடுத்து இந்தியாவிலிருந்து அங்கே படிக்கச் சென்ற மாணவர்களை நாடு அழைத்துவரும் பணியை மத்திய மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இதையடுத்து தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது மாநில மாணவர்கள் நாடு திரும்புவதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் இதனால் அவர்களது எதிர்காலம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் மீதான இரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இந்த போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம் அந்நாட்டில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். போருக்கு முன்பாக சுமார் 8 ஆயிரம் பேர் நாடு திரும்பிய நிலையில், போருக்கு பின்னர் சுமார் 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து மூன்று வாரங்கள் கழிந்துள்ளன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இதுவரை போருக்குப் பலியாகியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தவுடன் உலகம் முழுவதும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் பெற்று வருகிறது ரஷ்யா. மேலும், ரஷ்யாவின் தெருக்களில் ரஷ்ய மக்கள் பலரும் தங்கள் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் அரசுப் படைகளால் ரஷ்யப் போர் விமானிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவைச் சேர்ந்த இந்த விமானிகள் செய்தியாளர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். பிடிபட்ட விமானிகள் அனைவரும் கடந்த மார்ச் 13 அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும், உக்ரைன் மீதான அவரது படையெடுப்பையும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
பிடிபட்ட விமானிகளுள் ஒருவரான கால்கின் செர்கி அலெக்சீவிச் பேசியபோது, `நான் எனக்காக மன்னிப்பு கேட்கிறேன். உக்ரைனின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு முதியவருக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் இந்த நிலங்களின் மீதான எங்கள் படையெடுப்புக்காக மன்னிப்பு கோருகிறேன். இந்தப் படையெடுப்பிற்காக நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் ராணுவப் படையினரிடம் ஒன்றைச் சொல்கிறேன்.. நம் தலைமை கோழைத்தனமாகவும், துரோகிகளாகவும் நடந்து கொண்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.