மேலும் அறிய

Watch Video: மூன்று நாய்களால் கடித்துக் குதறப்பட்ட சிறுமி; இணையத்தை ஆக்கிரமித்த பதைக்கவைக்கும் வீடியோ..!

கேரளாவின் கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் என்ற பகுதியில் ஒன்பது வயது சிறுமியை மூன்று தெரு நாய்கள் கடித்து குதறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கேரளாவின் கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் என்ற பகுதியில் ஒன்பது வயது சிறுமியை மூன்று தெரு நாய்கள் கடித்து கொதறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கேரளாவின் கடலோர மாவட்டத்தில் மிகவும் முக்கியமான மாவட்டமாக இருப்பது கண்ணூர். இந்த மாவட்டத்தில் அண்மையில் தான் சிறுவன் ஒருவன் தெருநாய்களால் கடிக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், தெருநாய்கள் மீண்டும் ஒன்பது வயது ஜான்வி என்ற சிறுமியை கடித்துள்ள வீடியோ அப்பகுதி மக்களை அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளதுடன், அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் மனதில் பெரும் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஜான்வி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​மூன்று தெருநாய்களால் தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், நாய்கள் ஜான்வியை தரையில் இழுத்து, கடித்தது மட்டுமில்லாமல், ஒன்பது வயது சிறுமியை தனது இரைபோல இழுத்துச் செல்ல முயல்வதை அந்த வீடியோவில் காணலாம். உதவிக்காக அந்த சிறுமி அலறுவதையும், நாய்கள் அவளுடைய கைகள், கால்கள் மற்றும் தலை முழுவதும் பலமுறை கடிப்பதையும் அந்த வீடியோவில் காணலாம். 

உதவி கோரி ஜான்வியின் அலறல் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தபோது நாய்கள் ஓடிவிட்டன. ஆனால் அதற்குள் நாய்கள் தலை, வயிறு, தொடை மற்றும் கைகளில் ஆழமான காயங்கள் ஏற்படும் அளவிற்கு கடித்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​ஜான்வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முந்தைய நாய் தாக்குதல் சம்பவம்

கண்ணூர் மாவட்டம் சத்தினம்குளத்தில் அண்மையில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஆதில் என்ற மாணவனையும் தெருநாய் தாக்கி கடித்த சம்பவத்தை தொடர்ந்து இந்த சமீபத்திய தாக்குதல் நடந்துள்ளது. தற்போது சிறுமி அம்மாவட்ட மருத்துவமனையில் அதில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், ஜூன் 11ஆம் தேதி முழப்பிலங்காட்டில் தெருநாய்களால் நிஹால் என்ற பத்து வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக  உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நகராட்சி அலுவலர்களால் 31 நாய்கள் பிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நிஹாலின் தந்தை நௌஷத், வெறி பிடித்த தெருநாய் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கைகளைக் மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளார், தான் எதிர்கொண்ட சோகத்தை மற்றவர்கள் அனுபவிப்பதைத் தடுக்கும் நோக்கில் அவர் அந்த புகாரினை அளித்துள்ளார். 

கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி.பி.திவ்யா, தெருநாய்களால் தனிநபர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த பிரச்சனையில் நீதிமன்றத்தின் தலையீடு தேவை என தெரிவித்தார். மக்களின் உயிரைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திவ்யா, வெறி பிடித்த தெருநாய்களை அகற்றுவதற்கான அனுமதியைப் பெறுவது தொடர்பாக  நீதிமன்றத்தை அணுகும் திட்டமும் இருப்பதாக குறிப்பிட்டார்.


சுவாரஸ்யமான செய்திகளுக்கு ஏபிபி நாடு டெலிகிராமில் இணைய இங்கு க்ளிக் செய்யவும் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget