![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch: பிளாட்பாரத்தில் படுத்திருந்த குழந்தையை எட்டி மிதித்த ரயில்வே போலீஸ்… ஷாக் வீடியோ!
வைரலான இந்த வீடியோவில், RPF பணியாளர்களில் ஒருவர் பாதுகாக்க ஆளில்லாத குழந்தையை கொடூரமாக உதைப்பதைக் காண முடிகிறது.
![Watch: பிளாட்பாரத்தில் படுத்திருந்த குழந்தையை எட்டி மிதித்த ரயில்வே போலீஸ்… ஷாக் வீடியோ! Watch Railway police trampled a child lying on the platform Video going viral Watch: பிளாட்பாரத்தில் படுத்திருந்த குழந்தையை எட்டி மிதித்த ரயில்வே போலீஸ்… ஷாக் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/17/0b35bfd807e94ac9c3d680b0f61968751689575327034109_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர், பிளாட்ஃபாரத்தில் படுத்திருந்த ஒரு குழந்தை கொடூரமாக தாக்கும் துயரமான சம்பவத்தைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஆன்லைனில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குழந்தையை மிதிக்கும் போலீஸ்
வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், குழந்தையை இரக்கமின்றி தாக்கும் இதயத்தை உருக்கும் காட்சி பதிவாகி உள்ளது. பெல்தரா சாலை ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது போலீஸ் ஒருவரால் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. வைரலான இந்த வீடியோவில், RPF பணியாளர்களில் ஒருவர் பாதுகாக்க ஆளில்லாத குழந்தையை கொடூரமாக உதைப்பதைக் காண முடிகிறது. ஈவு இரக்கமின்றி, குழந்தையின் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காண்போரை அதிரச் செய்துள்ளது.
बलिया में RPF के जवान द्वारा बच्चे को मारने का वीडियो,बच्चे को बेरहमी से मारने का वीडियो वायरल,रेलवे स्टेशन प्लेटफार्म पर सो रहा था बच्चा,बच्चे के शरीर पर पैर रखकर धकेला गया,बेल्थरा रेलवे स्टेशन का बताया जा रहा वीडियो. @RPF_INDIA @AshwiniVaishnaw pic.twitter.com/2KzQs99Bsl
— Vineet Gupta (@aapka_vineet) July 16, 2023
வைரலான வீடியோ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்களிடம் கடும் கண்டனங்களை பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பலர், சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது போன்ற உரிமைகளை காவல்துறைக்கு கொடுத்தது யார் என்றும், இது போன்ற சம்பவங்கள், போது மக்கள் மீது நிகழ்த்தப்படாமல் இருக்கும் அளவுக்கு நடவடிக்கைகள் தேவை என்று கூறி வருகினறனர்.
வீடியோ குறித்து விசாரணை
உள்ளூர் அதிகாரிகளை இந்த வீடியோ சென்ற அடைந்துள்ளது நிலையில், இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணவும், அவரது செயல்களுக்கு அவர் பொறுப்புக் கூறவும் ரயில்வே பாதுகாப்புப் படை முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
इस घटना का त्वरित संज्ञान लेते हुए, सम्बन्धित कॉन्स्टेबल को तत्काल प्रभाव से निलंबित कर दिया गया है।
— North Eastern Railway (@nerailwaygkp) July 16, 2023
பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ட்வீட்
வினீத் குப்தா என்பவர் வெளியிட்டுள்ள இந்த விடியோவுடன், "பல்லியாவில் ஆர்பிஎப் காவலரால் குழந்தை கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தையின் உடலில் காலால் உதைக்கிறார், பெல்தாரா ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது," என்று எழுதியுள்ளார்.
அந்த பதிவிலேயே வடகிழக்கு ரயில்வே டிவிட்டர் பக்கம் பதில் எழுதியுள்ளது. "இச்சம்பவம் குறித்து உடனடி தகவல் அறிந்து, சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்," என்று கூறியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)