Watch Video: "பல்லு தேய்க்க வேற இடமே கிடைக்கலயா உனக்கு..?" ஓடும் மெட்ரோவில் ப்ரஷ் செய்த இளைஞர்...!
டெல்லி மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடை அணிந்துவந்து இளம் பெண் சர்ச்சையை ஏற்படுத்தியது ஓய்வதற்குள் இப்போது அடுத்த சம்பவம் ஆச்சரியமளித்துள்ளது.
டெல்லி மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடை அணிந்துவந்து இளம் பெண் சர்ச்சையை ஏற்படுத்தியது ஓய்வதற்குள் இப்போது அடுத்த சம்பவம் ஆச்சரியமளித்துள்ளது. இந்த முறை ஒரு இளைஞர் மெட்ரோ ரயிலில் பல் துலக்கியுள்ளார். ஒரு நிமிடத்திற்கும் குறைவாக ஓடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் இளைஞர் ஒருவர் பல் தேய்த்துக் கொண்டே வீட்டுக்குள் நடந்து திரிவதுபோல் சாகவாசமாக நடந்து திரிகிறார். அந்தக் காட்சியைப் பார்த்து சிலர் சிரிக்கின்றனர், சிலர் அதிர்ச்சியாகின்றனர், சிலர் முகம் சுளிக்கின்றனர். ஆனால் அந்த இளைஞரோ எந்த சலனமும் இல்லாமல் சுற்றித் திரிகிறார்.
வீடியோ இணைப்பு
View this post on Instagram
காத்துவாக்குல ஒரு டிரஸ்..
காத்துவாக்குல ஓர் ஆடையணிந்து டெல்லி மெட்ரோவில் பயணித்ததால் விமர்சனங்களுக்கு உள்ளான இளம் பெண் ரிதம் சனானா வெட்டி நியாயம் பேசுவோர் எல்லோருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
பத்திரிகைகளுக்கு அவர் கொடுத்த பேட்டியில், "ஆடை என்பது எனது சுதந்திரம். நான் எதை விரும்புகிறேனோ அதையே அணிவேன். நான் இதையெல்லாம் ஏதோ பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுக்காக செய்வதாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. என்னுடைய ஃபேஷன் சாய்ஸ் எல்லாம் உர்ஃபி ஜாவேத்தை காப்பியடிப்பதுபோல் இருப்பதாகவும் விமர்சிக்கின்றனர். அப்படி ஒருவர் இருப்பதே இந்த மெட்ரோ சம்பவத்திற்குப் பின்னர் என்னிடம் என் தோழி காட்டியதாலேயே தெரியும். இருப்பினும் அவரைப் பற்றி தெரிந்த பின்னர் அவர் மீது மரியாதை கொண்டேன்.
மெட்ரோவில் பிகினி:
அப்புறம் இன்னொரு விஷயம் என்னவென்றால், நான் கடந்த சில மாதங்களாகவே இதுபோல் உடையணிந்துதான் உலா வருகிறேன். இந்த ஆடைத் தேர்வு ஒரே நாளில் செய்து கொண்டதல்ல. என் குடும்பம் ரொம்பவே பழமைவாதம் நிரம்பியது. என்னை எப்போதுமே அவர்கள் என் விருப்பப்படி வாழ விட்டதில்லை. அதனால் இப்போது நான் ஒரு முடிவு செய்து என் விருப்பம்போல் வாழ்கிறேன். என் வாழ்க்கை என் விருப்பம். டெல்லி பிங்க் லைனில் மட்டும் என்னை அனுமதிக்கவில்லை. மற்றபடி எல்லா மெட்ரோ ரயில்களிலும் நான் பயணித்துவிட்டேன். என் குடும்பத்தினருக்கு என் ஆடை முறை பிடிக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் ஒருபடி மேலே சென்று என்னை மிரட்டி வருகின்றனர். ஆனால் ஐ டோன்ட் கேர்" என்றார்.
இப்போது இந்த இளைஞரிடமும் ஊடகங்கள் பேட்டி எடுக்கலாம். அதற்கு அவர் என்னச் சொலப் போகிறாரோ?!