Cyclone Mocha: இன்று கரையை கடக்கிறது ’மோக்கா புயல்’...! மேற்கு வங்க மக்களுக்கு எச்சரிக்கை! பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்!
மோகா புயலானது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து (இன்று) 14.05.2023 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை மிகத்தீவிர புயலாக கடக்கக்கூடும்.
நேற்று முன்தினம் (12.05.2023), தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர “மோக்கா” புயலானது, அன்று இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. நேற்று (13.05.2023) காலை 8.30 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 560 கிலோ மீட்டர் வடக்கு - வடமேற்கே நிலைகொண்டது. இந்த மோக்கா புயலானது வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து (இன்று) 14.05.2023 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை மிகத்தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
14.05.2023 மற்றும் 15.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16.05.2023 மற்றும் 17.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எச்சரிக்கை:
தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள, 'மோக்கா' புயல், அதிதீவிர புயலாக உருமாறி உள்ளதால், மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, ஒரு சில வடகிழக்கு மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், திரிபுரா, மிசோரம் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் தெற்கு அசாம் பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
அதிகபட்ச வெப்பநிலை :
14.05.2023 முதல் 17.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
14.05.2023, 15.05.2023 மற்றும் 16.05.2023 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகள்:
14.05.2023: இலங்கை கடற்கரையை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.05.2023: தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு அந்தமான் கடல் பகுதிகள்:14.05.2023 (இன்று) சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023 (இன்று) காலையிலிருந்து மணிக்கு 190 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வட மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 14.05.2023 (இன்று) நண்பகல் வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.