மேற்கு வங்காளத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வாக்காளர்.. மேலும் 3 பேர் உயிரிழப்பா?
மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்காளர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 91 தொகுதிகளுககு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில், இன்று 4-ஆம் கட்டமாக காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
44 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவிற்கு பலத்த பாதுகாப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த மாநிலத்தில் கூச் பெஹார் மாவட்டத்தில் சிதல்குச், பதந்துலி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு, ஆனந்த் பர்மன் என்ற முதல் தலைமுறை வாக்காளர் வாக்களிக்க வந்துள்ளார். அவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலைக்கு காரணம் பாஜகதான் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர், இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுடன், வெடிகுண்டுகளும் வீசப்பட்டது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர்.
வெடிகுண்டு வீச்சாலும், தடியடிகளாலும் வாக்களிக்க வந்த பலரும் காயம் அடைந்தனர். வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்காளர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.