மேலும் அறிய

வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜனநாயகத்திற்கு சவாலா? பினராயி விஜயன் கடும் கண்டனம்!

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 27ம் தேதி அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு, ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால். புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்தாமல், 2002-2004 வரையிலான வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு திவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜனநாயகத்திற்கு சவாலா? பினராயி விஜயன் கடும் கண்டனம்!

1950 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1960 வாக்காளர் பதிவு விதிகள் ஆகியவற்றின்படி, தற்போதைய பட்டியலை அடிப்படையாகக் கொண்டே எந்த ஒரு வாக்காளர் பட்டியல் திருத்தமும் மேற்கொள்ளப்பட வேண்டும். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் செய்வது நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதை மாநில தேர்தல் அதிகாரி தெளிவாகக் கூறி இருந்த போதிலும், சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தின் மீது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.வாக்களிப்பதைப் போன்று வேறில்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன் என்பதுதான் 2024-ம் ஆண்டின் தேசிய வாக்காளர் தின செய்தி. இந்த முழக்கத்தை ஊக்குவித்தவர்களே, அதற்கு முரணாக பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினார்கள். வயது வந்தோருக்கான வாக்குரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பின் பிரிவு 326-ஐ இந்த செயல் கடுமையாக மீறுகிறது.

அரசியல் வசதிக்காக குடிமக்களின் வாக்களிக்கும் அடிப்படை உரிமையை சிதைக்கவோ அல்லது பறிக்கவோ முடியாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டை மறைமுகமாக செயல்படுத்துவதற்கான முயற்சி என்ற கவலை அதிகரித்து வருகிறது. மத்தியில் உள்ள ஆளும் சக்திகள் எஸ்ஐஆர் செயல்முறையைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை தங்களுக்கு சாதகமாக கையாளுகின்றன என்ற விமர்சனம் இன்னமும் உள்ளது.பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. ஆனால், அதே செயல்முறையை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவது குற்றமற்றது என்றோ நடுநிலையானது என்றோ பார்க்கப்பட மாட்டாது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜனநாயகத்திற்கு சவாலா? பினராயி விஜயன் கடும் கண்டனம்!

விரிவான தயாரிப்பு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய இவ்வளவு பெரிய திருத்தத்தை, அவசரமாக நடத்துவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி.தனது நம்பகத்தன்மையை குறைக்கும் முடிவுகளில் இருந்து தேர்தல் ஆணையம் விலகி இருக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் உள்ள சக்திகள், தேர்தல் ஆணையத்தை ஆளும் கட்சிக்கான கருவி என்பதாக குறை மதிப்புக்கு உள்ளாக்கக்கூடாது. எஸ்ஐஆர் செயல்முறைக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் ஒன்றுபட்டு இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Trump Zohran Mamdani: அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Trump Zohran Mamdani: அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
Embed widget