Viral Video: டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த பயணி; இழுத்து போட்டு மிதித்த டிக்கெட் பரிசோதகர்கள்..!
Viral Video: மும்பையில் இருந்து ஜெய் நகர் வரை சென்ற ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவரை இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள் இழுத்து போட்டு மிதித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Viral Video: மும்பையில் இருந்து ஜெய் நகர் வரை சென்ற ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவரை இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள் இழுத்து போட்டு மிதித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் மாநிலம் முசாபர்பூரில் பயணி ஒருவரை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் இரண்டு ரயில் டிக்கெட் சேகரிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டிக்கெட் பரிசோதகர்களில் ஒருவருக்கும், பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதன் பின்னர் முழுக்க முழுக்க சண்டையாக மாறியது, அதில் அவர்கள் தக்கிக்கொள்வது தெளிவாக தெரிகிறது. இந்த சம்பவத்தினை அதே ரயிலில் பயணித்த பயணிகளில் ஒருவர் பதிவு செய்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பயணச்சீட்டு பரிசோதகர் பயணியை மேல் பெர்த்திலிருந்து கீழே இறக்க முற்படும்போது, பயணியின் காலைப் பிடித்துக்கொண்டு இழுக்கிறார், உடனே பயணி அதிகாரியை உதைத்துத் தடுக்க முயன்றார்.
டிக்கெட் பரிசோதகருடன் ஒரு சக ஊழியரும் சேர்ந்து, அந்த பயணியை தரையில் கீழே இழுத்து போட்டு மோசமாக அடிக்கிறார்கள், பூட்ஸ் அணிந்த கால்களால் பயணியின் முகத்திலும் உடல் முழுவதும் உதைக்கிறார்கள்.
ON CAMERA: 2 ticket collectors brutally #thrash #passenger on Mumbai-Jainagar train in #Muzaffarpur; suspended after shocking video goes viralhttps://t.co/QmZcbxhn31#India #IndiaNews #TicketChecker #ViralVideo #fight pic.twitter.com/2uZw4PjjPs
— Free Press Journal (@fpjindia) January 6, 2023
இதன் பின்னர், ரயிலில் இருந்த சக பயணிகள் இந்த தாக்குதலை தடுத்துள்ளனர். இந்த சம்பவம் ஜனவரி 2 ஆம் தேதி இரவு மும்பையில் இருந்து ஜெய்நகர் செல்லும் ரயிலில் தோலி ரயில் நிலையம் அருகே நடந்ததாக கூறப்படுகிறது. பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததால் வாக்குவாதம் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோ வைரலான நிலையில் இரண்டு டிக்கெட் சேகரிப்பாளர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.