நல்லதுக்குதான் சொன்னது.. ஆனா அது ஸ்கிரிப்ட் தான்.. வைரல் வீடியோவின் உண்மை இதுதான்..!
அந்த காணொளி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிறு சிறு காணொளிகளை உருவாக்கும் ஒரு இணையதள பக்கம் உருவாக்கியிருக்கும் மற்றொரு காணொளி
இணையதளம் பரவலாகப் பயன்படுத்தப்படும் யுகத்தில், கிடைக்கும் தகவல்களை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம் என்பது மிக முக்கியம் என்பதை சமீபத்திய நிகழ்வு இன்னொரு முறை உறுதி செய்திருக்கிறது.
சமீபத்தில், படிக்கட்டுகளில் பெரிய பைகளுடன் ஏறக் கஷ்டப்படும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரு இராணுவ வீரர்கள் உதவும் காணொளி இணையத்தில் வைரல் ஆனது. மக்கள் அனைவரும் இராணுவ வீரர்களின் உதவும் மனப்பான்மையைக் கொண்டாடித் தள்ளினர். வலதுசாரி ஊடகங்கள், வலைதளங்கள் இராணுவ அமைப்பை போற்றிப் புகழ்ந்ததோடு, இராணுவ வீரர்கள் நாட்டுக்கு எவ்வளவு முக்கியம், அவர்கள் செய்யும் சேவை எவ்வளவு விலைமதிப்பு வாய்ந்தவை என்று பாடம் எடுத்தன.
அந்த காணொளி குறித்து லாஜிகல் இந்தியன் (Logical Indian) வலைதளம் சமீபத்தில் உண்மையை வெளியிட்டிருக்கிறது. அதாவது, அந்த காணொளி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிறு சிறு காணொளிகளை உருவாக்கும் ஒரு இணையதள பக்கம் உருவாக்கியிருக்கும் மற்றொரு காணொளி. உதவும் நோக்கம் சில நேரங்களில் எவ்வளவு முக்கியம், அது உதவி தேவைப்படுவோருக்கு அந்த நேரத்தில் எவ்வளவு நம்பிக்கை தரும் விஷயமாக இருக்கும் என்பதை எடுத்துக் கூற அந்த தளம் இப்படி ஒரு காணொளியை இயக்கி இருக்கிறது. ஆனால், அதன் முழு காணொளியையும் கீழே இருக்கும் பதிவையும் வாசிக்காமல் இது நிஜத்தில் நடந்த நிகழ்வு என்று வலது சாரி கும்பல் செய்தியைப் பரப்பி இருக்கிறது. அதிலும், கிரியேட்டலி மீடியா தளம் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை விமர்சித்து இராணுவத்தின் மகிமையை இப்போது புரிந்துகொள்வீர்கள் என்று பதிவிட்டுள்ளது.
கிடைக்கும் தகவல்களை பரிசீலனை செய்வதும், அதை நாம் நம்பும் தர்க்கங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தாமல் நடுநிலையாக இருப்பதும் தகவல்கள் குவியும் யுகத்தில் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு இன்னொரு முறை எடுத்துரைத்திருக்கிறது.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்