Viral Video : இதுதான் கர்மா..! நாயை அடிக்கப் போயி வாங்கிக் கட்டிக்கிட்ட சிறுவன்..! வைரலாகும் வீடியோ..
தன்வினை தன்னைச்சுடும் என்பதற்கு உதாரணமாக நாயை தாக்க முற்பட்ட சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீதம் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
தன்வினை தன்னைச் சுடும் என்ற பழமொழி மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதன் அர்த்தம் நாம் என்ன செய்கிறோமோ, அதுவே நமக்கு நிகழும் என்பதுதான். இதை உணர்த்தும் வகையில் நம்மைச் சுற்றிலும், நம் வாழ்விலும் ஏராளமான சம்பவங்கள் நடைபெறும்.
இந்த பழமொழியை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சிறுவர்கள் ஒன்றாக இணைந்து விளையாடுகின்றனர். அவர்கள் வீட்டின் மாடிப்படியில் இருந்து இறங்கும் நாயை அடித்து விரட்டி விளையாடுகின்றனர்.
View this post on Instagram
ஒவ்வொரு சிறுவர்களின் கையிலும் பலமான கம்பு ஒன்று உள்ளது. அப்போது, இவர்களை கண்டு பயந்து அந்த நாய் ஓடுகிறது. அப்போது, சிறுவன் ஒருவன் நாயின் மீது தன் கையால் வைத்திருந்த கட்டையை பலமாக வீசுகிறான். அப்போது, அவன் பின்னால் இருந்த சிறுவனும் நாயை தாக்குவதற்காக கட்டையை பலமாக வீசுகிறான்.
ஆனால், அந்த சிறுவன் வீசிய கட்டை அவனுக்கு முன்னால் நின்று நாயை தாக்க கட்டையை வீசிய சிறுவனின் முதுகில் பலமாக விழுந்தது. அப்போது, கட்டையால் பலமாக தாக்கப்பட்ட சிறுவன் வலியில் துடிதுடிக்கிறான். இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு சிறுவன் வீடியோவாக பதிவு செய்துள்ளான்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் கர்மா விடாது என்றும், என்ன செய்தோமோ அதைத்தான் அனுபவிப்போம் என்று ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். கர்மாவிற்கு சிறந்த உதாரணமாக இந்த வீடியோ ஆயிரக்கணக்கான மக்களால் பகிரப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் பதிவிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எழுதிய கடிதத்தால் சர்ச்சை...மூத்த நீதிபதிகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடு...என்னதான் பிரச்னை?
மேலும் படிக்க : Jammu Kashmir Tourist: 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குவிந்த சுற்றுலா பயணிகள்! ஸ்தம்பிக்கும் ஜம்மு காஷ்மீர்