Ayodhya Temple: அயோத்தி கோயிலுக்கு நேபாளத்திலிருந்து 2 பாறைகள்.. அடுத்தது வில்.. ஆச்சரிய விவரம்..
அயோத்தியில் ராமர் கோயில் கோயில் கட்டுவதற்காக நேபாளத்திலிருந்து இரண்டு பாறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு சாலிகிராம் கற்கள் இன்று (வியாழக்கிழமை) வந்தடைந்தன. நேபாளத்தின் மியாக்டி மற்றும் மஸ்டாங் மாவட்டங்கள் வழியாக பாயும் காளி கண்டகி ஆற்றின் ஆற்றங்கரைகளில் மட்டுமே காணப்படும் சாலிகிராம்கள், சீதாவின் பிறப்பிடமான நேபாளத்தின் ஜனக்பூரிலிருந்து கனரக லாரிகளில் அயோத்தியை வந்தடைந்தது.
இந்த புனித கற்களை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கும் முன்பாக ராமர் பிறந்த இடத்தில் மதகுருமார்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் பாறைகளை மாலைகளால் அலங்கரித்து பூஜைகள் செய்தனர்
கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் முக்கிய வளாகத்தில் ராமர் மற்றும் ஜானகி சிலைகளை கட்டுவதற்கு இந்த பாறைகள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாலிகிராம் பாறைகள் புதன்கிழமை கோரக்பூரை அடைந்தது. பின்னர் அங்கு அவை பக்தர்களின் பிரார்த்தனைக்காக வைக்கப்பட்டது.
Uttar Pradesh | Shaligram stones brought from Nepal reached Ayodhya.
— ANI (@ANI) February 2, 2023
They are expected to be used for the construction of idols of Ram and Janaki. pic.twitter.com/76L3IzNdAF
நேபாளம்:
நேபாளத்தில் காளி கண்டகி என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இது தாமோதர் மலையிலிருந்து உற்பத்தியாகிறது. . இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்று கூட மக்கள் கூறுகிறார்கள். இந்த இரண்டு பாறைகளும் அங்கிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இரண்டு பாறைகளும் சுமார் 30 டன் மற்றும் 14-15 டன் எடை கொண்டவை" என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.
18 டன் எடையும், 16 டன் எடையும் கொண்ட இரண்டு புனித கற்கள், சிலை தயாரிக்க தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்தது வில்:
மத முக்கியத்துவம் வாய்ந்த பீகாரின் மதுபானியின் பிப்ரான் கிர்ஜஸ்தான் வழியாக கல் அணிவகுப்புகள் பயணித்து, அயோத்தியை அடைவதற்கு முன்பு முசாபர்பூர் மற்றும் கோரக்பூர் ஆகிய இரண்டு இடங்களில் இரவு நிறுத்தம் செய்யப்படது.
ராமர் கோயில் அறக்கட்டளையின் தெரிவிக்கையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு , ஜானகி கோயில் ஒரு வில்லை அனுப்பும் என்று நேபாளத் தலைவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















