யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்! என்ன ஆச்சு?
யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உத்தரபிரதேசத்தின் விருந்தாவனைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து, அப்பெண்டிக்ஸை குணப்படுத்த தனது வயிற்றை வெட்டிக் கொண்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின்னார் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
விருந்தாவன் மாவட்ட மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சஷி ரஞ்சன் கூறுகையில், ”அந்த நபர் சந்தையில் இருந்து வாங்கப்பட்ட அறுவை சிகிச்சை பிளேடு, ஊசி மற்றும் தையல் வடம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வயிற்றில் ஒரு கீறலைச் செய்து 11 தையல்கள் போட்டுள்ளார்.
சன்ராக் கிராமத்தைச் சேர்ந்த ராஜா பாபு, பல ஆண்டுகளாக அபெண்டிக்ஸால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் தனக்கு தானே யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் ஆக்ராவில் உள்ள எஸ்என் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதில் ஒரு கணவர் தனது மனைவிக்கு பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், தனது மனைவியின் வயிற்றில் அறுவை சிகிச்சை துடைப்பான் ஒன்றை விட்டு விட்டதாக புகார் அளித்துள்ளார். இதனால் தனது குழந்தைக்கு அவர் தாய்ப்பால் கூட கொடுக்க முடியவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கணவர் ககன் தீப் கூறுகையில், “சி.டி. ஸ்கேன் எடுத்த பிறகே இது எங்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர் அனிலிடம் முறையிட்டோம். ஆனால் அவர் அதை ரத்த உறைவு எனவும் கறைந்து விடும் எனவும் திட்டி அனுப்பி விட்டார். சில மாத்திரைகளை எழுதி கொடுத்துள்ளார்.
அடுத்த சில நாட்களில், மனைவியின் நிலை மோசமடைந்தது. அவர் கடுமையான மூட்டு, மணிக்கட்டு மற்றும் கால் வலியை எதிர்கொண்டார், மேலும் நடக்கவோ, நிற்கவோ, அல்லது தனது குழந்தையைத் தூக்கி உணவளிக்கவோ கூட முடியவில்லை.
அந்த நேரத்தில் தொற்று அவரது நுரையீரல், இரத்தம் மற்றும் பிற பகுதிகளில் பரவியிருந்தது. இந்த மருத்துவக் குற்றத்தால் அவர் கிட்டத்தட்ட உயிரை இழக்கும் தருவாயில் இருந்தார்” எனத் தெரிவித்தார்.
குடும்பத்தினர் அவளை வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு, ஜனவரி 25 அன்று அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து, அறுவை சிகிச்சை துடைப்பான் அகற்றப்பட்டது. பிப்ரவரி 15 அன்று அந்தப் பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

