Crime: 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல்.. பெண் உட்பட 4 பேர் கைது!
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஹர்துவாகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து அந்தபெண் அளித்த புகாரில், தனது மகள் இந்த கொடூரத்திற்கு ஆளானதுக்கு பக்கத்து வீட்டு பெண் முக்கிய காரணம் என்றும், அவரே என் மகளை வன்கொடுமை செய்த மூவருக்கும் உடந்தையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், என்ன நடந்தது என்பதை யாரிடமாவது சொன்னால், என் பெண்ணை வன்கொடுமை செய்த அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகளை மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட, மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் மீது IPC பிரிவுகள் 376D (கும்பல் வன்கொடுமை), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), 342 (தவறான கட்டமைப்பு), 120-B (குற்றச் சதி) மற்றும் POCSO சட்டத்தின் பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு விவகாரம் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
FIR இன் படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணால் 13 வயது சிறுமி தவறாக வழிநடத்தப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டார், அங்கு குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆண்கள் அவளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் வன்கொடுமை செய்தபோது அதை வீடியோவாக படம்பிடித்து, மாலையில் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், "புகார் கொடுக்க ஞாயிற்றுக்கிழமை நாங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகினோம், ஆனால் அங்குள்ள காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவருடன் சமரசம் செய்யுமாறு எங்களை வற்புறுத்தினர். இருப்பினும், திங்கள்கிழமை, விஷயம் கவனத்திற்கு வந்ததும், இந்த வழக்கில் அவர்கள் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போக்சோ சட்டம் :
கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். 18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு :
- Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
- Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
- Sexual Assault - பாலியல் தொல்லை
- Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
- Sexual Harassment - பாலியல் தொந்தரவு
- Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்
இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.
- 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
- இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
- 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)