அண்ணல் காந்தியை முன்னிலைப்படுத்தி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பைடன்
நாட்டின் ஜனநாயகப் பயணத்தை கெளரவம் வகையில் இந்திய மக்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகப் பயணத்தை கெளரவம் வகையில் இந்திய மக்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் தவிர்க்க முடியாத கூட்டாளிகள் எனக் கூறிய அவர், "கிட்டத்தட்ட நான்கு மில்லியன் (40 லட்சம்) பெருமைமிக்க இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகெங்கிலும் உள்ள மக்கள், ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சையின் வழிகாட்டுதலின் மூலம் தனது ஜனநாயக பயணத்தை கௌரவிக்க அமெரிக்கா இந்திய மக்களுடன் இணைகிறது" என பைடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், "இந்த ஆண்டு, நமது மாபெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறோம். இந்தியாவும் அமெரிக்காவும் இன்றியமையாத கூட்டாளிகள். மேலும், அமெரிக்க, இந்திய நாடுகளுக்கிடையேயான வியூக ரீதியான கூட்டாண்மை என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்துவதற்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் அடித்தளமாக அமைந்துள்ளது.
எமது மக்களிடையே உள்ள ஆழமான பிணைப்பினால் எமது கூட்டாண்மை மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகம் எங்களை மிகவும் புதுமையான, அனைவரையும் உள்ளடக்கிய வலுவான தேசமாக மாற்றியுள்ளது" என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் ஆண்டுகளில், இரண்டு ஜனநாயக நாடுகளும் விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கைப் பாதுகாக்க, தங்கள் மக்களுக்கு அதிக அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை வளர்ப்பதற்கும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கை முன்னெடுத்துச் செல்வதற்கும், சவால்களை எதிர்கொள்வதற்கும் தொடர்ந்து ஒன்றாக நிற்கும் என்று அமெரிக்க அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிளிங்கன் தனது அறிக்கையின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "இந்த முக்கியமான நாளில், நாங்கள் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயக விழுமியங்களைப் பற்றி சிந்திக்கிறோம். மேலும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை ஒன்றாகக் கட்டமைக்கும் இந்திய மக்களை நாங்கள் மதிக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இந்தியா 76வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்! எங்கள் அன்பான நண்பர் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளார். இந்தியா தொடர்ந்து முன்னேறி, அதன் மகத்தான திறனை உணர்ந்து, அதன் வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்