மோடியை ஆதரித்ததால் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த ஆண்.. தீவிர விசாரணையில் வழக்கு..
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்த பெண் ஒருவருக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்த பெண் ஒருவருக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார். இதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு வாக்களித்ததால், தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை துன்புறுத்தியதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
A man in #UttarPradesh's Moradabad district gave #tripletalaq to his wife for supporting PM Narendra Modi and Yogi Adityanath.#RE https://t.co/iAM17NvFso
— IndiaToday (@IndiaToday) July 29, 2022
பாதிக்கப்பட்ட பெண், மார்ச் 3ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தாலும், போலீசார் இப்போதுதான் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் மொராதாபாத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும்படி கணவர் கூறியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். ஷனா இராம் என்ற பாதிக்கப்பட்ட பெண், மொராதாபாத்தில் உள்ள பீர்சாடாவில் வசிக்கும் முகமது நதீமை 2019 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்ததால், திருமணமான சில நாட்களிலேயே தனது மைத்துனர் தன்னை துன்புறுத்தத் தொடங்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் படோரியா கூறுகையில், "கணவனின் சகோதர சகோதரிகள் துன்புறுத்தியதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்திய தண்டனை சட்டம், 376 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க கோட்வாலி காவல் நிலைய காவல்துறையினருக்கு மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்த காரணத்தால் மனைவிக்கு கணவர் விவாகரத்து அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்