மேலும் அறிய

கேரள மாநிலத்தால் இனியும் ஒரு பேரழிவை தாங்கி கொள்ள முடியாது - அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு

முல்லை பெரியாறு அணை உடைந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் என்று ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லை பெரியாறு அணை என்பது கேரளா மாநிலம் மற்றும் பயன் அடையவில்லை தமிழ்நாட்டின் பல பகுதியின் விவசாயத்திற்கு, குடிநீருக்கும் பயன்படுகிறது. குறிப்பாக 2 மாநிலத்திற்கு நீராதாரமாக விளங்கக்கூடிய அணையாகும்.

இந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒவ்வொரு மழை பெய்யும் காலங்களில் கேரளாவில் பொய்யான பிரச்சாரங்கள் செய்யபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. இதனால், கேரள மக்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, உடனடியாக அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று பல்வேறு பிரச்சாரங்களில் கேரளாவில் உள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சமூக வலைதளங்களில் கூக்குரல் இட்டு வருகின்றனர். 

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை. தொடர்ந்து  உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு சார்பில் கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பித்தும் வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து, முல்லை பெரியாறு அணை நீர்வரத்து அதிகரித்தவுடன், அங்குள்ள மக்களை பயமுறுத்தும் விதமாக, சில அமைப்புகள் முல்லை பெரியாறு அணை இடிய போகிறது என்று சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


கேரள மாநிலத்தால் இனியும் ஒரு பேரழிவை தாங்கி கொள்ள முடியாது - அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு

கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்கும், முல்லைப் பெரியாறு அணைக்கும் முடிச்சு போட்டு,  கேரளா சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர். மேலும், அமைச்சரவையிலும் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வாதங்கள் முன்வைத்து பேசப்பட்டு வருகிறது.

இதனை தமிழக விவசாய சங்கங்கள் முற்றிலுமாக கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் தெரிவித்திருந்த போதிலும் அணை உடையும் அபாயம் இருப்பதாக கூறி வதந்திகள் பரப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இடுக்கியில் நடந்தது. 

இந்த கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்தும், புதிய அணை கட்டுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்பு  கேரளா அமைச்சர் அகஸ்டின் கூறுகையில்..  முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அணை ஆபத்தில் இருப்பதாகவும், உடையப்போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது இது முற்றிலும்  தவறு என்றார்.


கேரள மாநிலத்தால் இனியும் ஒரு பேரழிவை தாங்கி கொள்ள முடியாது - அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி நேற்று பேசுகையில்.. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுப்பிய பதிவை பேஸ்புக்கில் பார்த்தேன். அணை உடையுமா அல்லது உடையாதா? என்ற கேள்வி என்னுடைய இதயத்தில் ஒலித்து கொண்டேயிருக்கிறது. ஒருவேளை அணை உடைந்தால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். நீதிமன்றங்கள் பதில் அளிக்குமா? நீதிமன்றங்களில் உத்தரவை பெற்று வருபவர்கள் அணை தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற முடிவை தெரிவிப்பார்களா. அவர்களுடைய செயல்களினால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். கேரள மாநிலத்தால் இனியும் ஒரு பேரழிவை தாங்கி கொள்ள முடியாது என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Embed widget