மேலும் அறிய

உ.பி.யில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற அமைச்சர் மகன்; நாடு முழுவதும் இன்று போராட்டம் அறிவிப்பு!

உ.பியில் போராட்டத்தின் போது விவசாயிகள் கொல்லப்பட்டச் சம்பவத்தைக்கண்டிக்கும் விதமாக இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றிக்கொன்ற அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் தொடர்ந்துப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அமைச்சர் எந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் விவசாயிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி ஏந்தி போராட்டங்களையெல்லாம் நடத்திவருகின்றனர். அப்படி தொடங்கிய ஒரு போராட்டத்தில் தான் அரசின் அடக்குமுறை மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

  • உ.பி.யில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற அமைச்சர் மகன்; நாடு முழுவதும் இன்று போராட்டம் அறிவிப்பு!

 உத்தரப்பிரதேசத்தில் கேரி மாவட்டத்தில்  பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா கலந்துக்கொண்டார்.  மேலும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் கலந்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தகவலையறிந்த விவசாயிகள் திகோனியா என்னும் ஊரில் அமைச்சர் மற்றும துணை முதல்வருக்கு எதிராகக் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது கூட்டத்திற்குள் மத்திய அமைச்சரின் பின்னால் வந்த அவரது மகன் கார் தாறுமாறாக புகுந்தது. இதனால் கார் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.  இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும் கோபத்தில் விபத்து ஏற்படுத்தி காரை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தியதில், கார் முழுவதும் எரிந்து நாசமானது.

இதற்கிடையில் தான், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் நிகழ்ச்சி நடைபெறவிருந்து பானிபூர்பூருக்கு உ.பி துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா வந்தார். அப்போது கோபத்தில் இருந்த விவசாயிகள் துணைமுதல்வரின் காரை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்திய போது, அவ்வழியாக வந்த கார்களை மறித்துத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய தாக்குதலின் காரணமாகவும் விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தர்ஷன் பால் தெரிவிக்கையில், அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் ஏறி இறங்கியதில் விவசாயிகள் இருவர் உயிரிழந்தனர். ஆனால் கடைசியாக கிடைத்த தகவலின்படி, விவசாயிகள் போராட்டத்தின் போது வெடித்த வன்முறையால், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் இறந்ததாகவும், மற்ற நான்கு பேர் விவசாயிகள் என கூறப்படுகிறது. ஆனால் உ.பியில் அரசு இதுவரை 6 பேர் பலியானதாகக்கூறியுள்ளது.

  • உ.பி.யில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற அமைச்சர் மகன்; நாடு முழுவதும் இன்று போராட்டம் அறிவிப்பு!

இந்நிலையில் தான், போராட்டத்தின் போது விவசாயிகள் கொல்லப்பட்டச் சம்பவத்தைக்கண்டிக்கும் விதமாக இன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்ட அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. இதோடு இச்சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கே சிக்கலா? ஊசலில் உதயநிதியின் எதிர்காலம்? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கே சிக்கலா? ஊசலில் உதயநிதியின் எதிர்காலம்? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”திமுக சூழ்ச்சியில் ராமதாஸ்!விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்?”பகீர் கிளப்பும் அன்புமணி!
அமைச்சர் திடீர் ராஜினாமா!3 MLA-க்கள் பதவி விலகல்..புதுச்சேரி அரசியலில் TWIST
லாரியில் சிக்கிய BIKE மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி | Villupuram | Accident News
Train Attack | “அய்யோ அடிக்காதீங்கம்மா” மூதாட்டியை தாக்கிய பெண்கள்! ரயிலில் நடந்த கொடூரம்!
Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கே சிக்கலா? ஊசலில் உதயநிதியின் எதிர்காலம்? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கே சிக்கலா? ஊசலில் உதயநிதியின் எதிர்காலம்? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
Tamilnadu Roundup: சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் மரணம்.. திமுக அரசை விளாசிய விஜய் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் மரணம்.. திமுக அரசை விளாசிய விஜய் - தமிழகத்தில் இதுவரை
இன்று முதல் ரயில் கட்டண உயர்வு ! புறநகர் ரயில் நிலை என்ன? முழு விவரம்!
இன்று முதல் ரயில் கட்டண உயர்வு ! புறநகர் ரயில் நிலை என்ன? முழு விவரம்!
Bihar Road: நட்ட நடுரோட்ல குத்தவெச்ச மரங்கள்.. எப்புட்றா வண்டி ஓட்றது? பாலத்திற்கே சவால் விடுக்கும் சாலை
Bihar Road: நட்ட நடுரோட்ல குத்தவெச்ச மரங்கள்.. எப்புட்றா வண்டி ஓட்றது? பாலத்திற்கே சவால் விடுக்கும் சாலை
எங்களையே விமர்சிப்பியா? சைபர் தாக்குதல்.. அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்!
எங்களையே விமர்சிப்பியா? சைபர் தாக்குதல்.. அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்!
Embed widget