இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை உறுதி : பிளான் போட்ட மத்திய அரசு
National Highways: லக்னோ-கான்பூர் விரைவுச் சாலை திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளோம், விரைவில் இந்த தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்த உள்ளோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

உலகத் தரம் வாய்ந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை, இந்தியா கண்டுள்ளது என்றும், இது நமது உள்கட்டமைப்பைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்றும் நமது தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை, உலகத் தரத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் நமது சொத்துகள்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, தெரிவிக்கையில் “தேசிய நெடுஞ்சாலைகள், நமது தேசிய சொத்துகள், அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். கட்டுமானத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், நமது அமைப்பில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், ஒப்பந்ததாரர்களின் பொறுப்பை சரிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்”, என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.
லக்னோ-கான்பூர் விரைவுச் சாலை:
மேலும், தொழில்நுட்பம் ஒரு சிறந்த இயக்கு சக்தியாக இருப்பதுடன், தானியங்கி மற்றும் நுண்ணறிவு இயந்திர உதவியுடனான கட்டுமானத்தை ஏற்றுக்கொள்வது, சரியான திசையில் பயணிக்கும் ஒரு முயற்சியாகும்.
லக்னோ-கான்பூர் விரைவுச் சாலை சோதனை திட்டத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம், விரைவில் இந்த தொழில்நுட்பத்தை மற்ற திட்டங்களுக்கும் செயல்படுத்துவோம்”, என்று தெரிவித்தார்.
உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலை:
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணையமைச்சர் அஜய் தம்தா கூறுகையில், “உலகத் தரம் வாய்ந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது, இது நமது உள்கட்டமைப்பைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தில் ஒவ்வொரு பங்குதாரரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
நாம் முன்னேறும்போது, உணரிகள், செயற்கைக்கோள்கள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு அவசியம்.
தொடர்ச்சியான தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை தொலைநோக்குப் பார்வையுடன் சீரமைக்கவும், நமது தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்", என்று குறிப்பிட்டார்.
Also Read: Space News: டாப் 7 விண்வெளி செய்திகள்: சிக்கிக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் முதல் விண்வெளி சுற்றுலா வரை
நுண்ணறிவு இயந்திரம்:
'தானியங்கி மற்றும் நுண்ணறிவு இயந்திர உதவியுடன் கட்டுமானம்' தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமான வலிமையை மேம்படுத்துவதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட 'தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் தானியங்கி மற்றும் நுண்ணறிவு இயந்திர உதவியுடன் கட்டுமானத்தை ஏற்றுக்கொள்வது' குறித்த வரைவுக் கொள்கையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் நடைபெற்ற நிகழ்ச்சியில் , இதுகுறித்தான தகவல் தெரிவிக்கப்பட்டது.
Also Read: Chennai Power Shutdown: சென்னை மக்களே நோட் ! நாளை ( 03.02.2025) இங்கெல்லாம் மின்தடை?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

