Watch Video: உயிரியல் பூங்காவில் புதிதாக இரண்டு வெள்ளை புலிக்குட்டிகள்.. வைரலாகும் ஹிட் வீடியோ..
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், தில்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் இன்று காலை இரண்டு வெள்ளைப் புலிக் குட்டிகளை பொதுமக்கள் பார்வைக்காக பூங்காவில் விடுவித்தார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், தில்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் இன்று காலை இரண்டு வெள்ளைப் புலிக் குட்டிகளை பொதுமக்கள் பார்வைக்காக பூங்காவில் விடுவித்தார்.
#WATCH | Union Minister for Environment Forest and Climate Change Bhupender Yadav releases Cubs in the arena of white tiger enclosure at Zoological Park in Delhi. pic.twitter.com/7TU6zJ585s
— ANI (@ANI) April 20, 2023
சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த புலிக்குட்டிகள் பிறந்தன. இரண்டு புலிக்குட்டிகளும் பூங்காவில் விளையாடும் காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இன்று பூங்காவில் இருக்கும் அரங்கிற்குள் இரண்டு வெள்ளை புலி குட்டிகள் விடுவிக்கப்படும் என்பதால், நாளை உயிரியல் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ”புலிக்குட்டிகள் பூங்காவின் சூழலுக்கு ஏற்ப பழகுவதற்காக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என டெல்லி உயிரியல் பூங்காவில் இயக்குனர் அகன்ஷா மகாஜன் கூறியுள்ளார். வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நிலையில் குட்டிகளின் தந்தையான விஜய் உடன் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
#WATCH | Union Minister Bhupender Yadav releases Cubs in the arena of white tiger enclosure at Zoological Park in Delhi. pic.twitter.com/9tCnCuiWG9
— ANI (@ANI) April 20, 2023
அகன்ஷா மகாஜன், மேலும் கூறுகையில் திங்களன்று மீண்டும் மக்கள் பார்வைக்கு புலிக்குடிக்கள் அரங்கிற்குள் விடப்படுவதற்கு முன் குட்டிகளின் நடவடிக்கை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி பெண் புலியான சீத்தாவிற்கு 3 வெள்ளை புலிக்குட்டிகள் பிறந்தன. ஆனால் அதில் ஒரு குட்டி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தது. அதேபோல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெள்ளை பெண் புலியான வாணி ராணி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.