இத்தாலி வழித்தோன்றல் இல்லை என்பதை நிரூபியுங்கள் சோனியா ஜி: உமா பாரதி பேச்சு..
அமலாக்கத் துறையில் ஆஜராகும் போது காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்வதைத் தடுக்க வேண்டும். அப்போது தான் சோனியா காந்தி இத்தாலி வழித்தோன்றல் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று பாஜக தலைவர் உமா பாரதி கூறியுள்ளார்.
அமலாக்கத் துறையில் ஆஜராகும் போது காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்வதைத் தடுக்க வேண்டும். அப்போது தான் சோனியா காந்தி இத்தாலி வழித்தோன்றல் இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று பாஜக தலைவர் உமா பாரதி கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தியுடன் இன்று மதியம் அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அலுவலகத்திற்கு சென்றார். இசட் பிளஸ் பாதுகாப்புடன் அவர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். சமீபத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி முகக்கவசம் அணிந்தவாறு அலுவலக்திற்கு சென்றார். சோனியா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை இயக்குநரகத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கரிஸ் கட்சியினர் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அமலாகத்துறையை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "எங்களிடமிருந்து பாஜகவிற்கு சென்ற காங்கிரஸ் தலைவர்கள்தான் காங்கிரஸ் கட்சி என பிரதமர் நினைத்து கொண்டிருப்பதை அவர் மறுந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி என்றால் என்ன, காந்தி குடும்பம் என்றால் யார் என்பதை புரிந்து கொள்ள் அவர்கள் பலமுறை மறு பிறவி எடுக்க வேண்டும்" என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக தலைவர் உமா பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில், "சோனியா காந்தி அவர்கள் அமலாக்கத் துறை அலுவலகம் முன் நடைபெறும் போராட்டங்களை தடுத்து நிறுத்தினால் தான் அவர் இந்திய குடிமகள், இந்தத் தேசத்தின் தலைவர் என்று ஏற்றுக் கொள்வோம். இல்லாவிட்டால் அவர் இத்தாலிய வழித்தோன்றல் தான் என்பதை எங்களால் மறக்க முடியாது. அதனாலேயே அவர் இந்திய சட்டத்தையும், அரசியல் சாசனத்தையும் மதிக்கவில்லை என்று கருதுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
வழக்கு பின்னணி:
அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. இதனிடையே, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றிய தில் முறைகேடு நடந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே ராகுல் காந்தி 5 முறை ஆஜராகிவிட்டார்.
காங்கிரஸின் குற்றச்சாட்டு:
கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ராகுல் காந்தி கம்பெனியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனத்தில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் 76 சதவிகித பங்குதாரர்கள். மீதமுள்ள 24 சதவிகிதப் பங்குகளை மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோராவும், ஆஸ்கர் பெர்ணான்டசும் வைத்திருந்தனர்.
அனைத்துப் பரிவர்த்தனைகளும் சட்டப்பூர்வமாகவும் வெளிப்படையாகவுமே நடந்துள்ளன. அசோசியேட்டடு ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு மாற்றியதில் பணம் மோசடி நடந்துள்ளதாக கடந்த 2012 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தில் தனி புகாரை சுப்பிரமணியன் சாமி அளித்தார். அதன்பிறகு, மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. இந்த வழக்கை அமலாக்கத்துறை மூலம் அரசியல் நோக்கத்துடன் கையாள்கிறது என்பதே காங்கிரஸ் முன்வைக்கும் புகார்.
இந்நிலையில் சோனியா காந்தியை பாஜகவினர் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.