Udaipur’s Latest Tourist Attraction: இது வேற லெவல்.. மாமரத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு!
குல் பிரதீப் சிங் அவர்களின் வீடும் சுற்றுலா தளங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் 40அடி உயர மாமரத்தில் மரத்தை, எந்த சேதமும் படுத்தாமல் 4மாடி வீடு கட்டி இருக்கிறார்.
ராஜஸ்தானில் இருக்கும் உதய்ப்பூர் நகரம், சுற்றுலாத்தலத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. இது ஏரிகளின் நகரம் எனவும் அழைக்கப்படும்.கலை வடிவமைக்க கோவில்கள், பெரிய பேலஸ்கள் , அழகான சுற்றுசூழல், என சுற்றுலா தளத்திற்கு பெயர் பெற்ற இந்த ஊரில், குல் பிரதீப் சிங் அவர்களின் வீடும் சுற்றுலாத் தலங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. அதற்கு காரணம், 40 அடி உயர மாமரத்தில் மரத்தை, எந்த சேதமும் படுத்தாமல், 4 மாடி வீடு கட்டி இருக்கிறார். இது மிகவும், பிரபலமானது.
குல் பிரதீப் சிங் அவர்களின் மர வீடு 2000 ஆம் ஆண்டில் மிகவும் வித்தியாசமான சுற்றுலா தலமாக உள்ளது. இவர் IIT யில் இன்ஜினீயர் படித்து இருக்கிறார். சுற்றுசூழல் மீது இருக்கும் ஆரவத்தினால், 80 ஆண்டுகள் பழமையான இந்த மரத்தை எந்த சேதமும் படுத்தாமல் தனது வடிவமைத்து இருக்கிறார். மரத்தின் கிளைகளுக்கு தகுந்தாற் போல், வீட்டை வடிவமைத்து இருக்கிறார். இவரின் வீட்டிற்குள் மரத்தின் கிளைகள் இருக்கும். இதில் அவர் அணைத்து வசதிகளுடனும் வீட்டை வடிவமைத்து இருக்கிறார். அதாவது,வீட்டின், ஹால், சமையலறை, படுக்கை அறை டைன்னிங் ஹால், பாத்ரூம், நூலகம் என சகல வசதிகளுடன் இவர் நான்கு மாடி வீட்டை வடிவமைத்து, வீட்டை சிமெண்ட் இல்லாமல், முழுவதும், இரும்பு கம்பிகளால் கட்டி உள்ளார். இவர் வீட்டிற்கு எந்த ஏசியும் தேவைப்பட வில்லை.மரத்தின் நிழல் வீட்டை முழுவதுமாக அடைத்து அணைத்து சீதோஷண நிலைக்கு தகுந்தாற் போல் உள்ளது.
குல் பிரதீப் சிங் அளித்த பேட்டியில் , உதய்ப்பூரில் வசித்த மக்கள், வீட்டை சுற்றி பழ மரங்களை வளர்த்து அதில் கிடைக்கும் பழங்களை விற்று வாழ்ந்து வந்தனர். காடுகள் அளித்தல், மரங்களை அதிகளவில் வெட்டுதல் போன்ற பிரச்சனைகள் தொடங்கியதில் இருந்து, நிறைய அழிவை சந்திக்க தொடங்கியது. வீட்டை கட்டுவதற்கு, பில்டர்களிடம் பேசிய போது , மரத்தை வெட்டாமல் வீடு கட்ட முடியாது என கூறினார். அதனால் என்னுடைய கனவு இல்லத்தை நானே வடிவமைக்க தொடங்கினேன். வீட்டை கட்ட தொடங்கும் முன், இந்த மரத்தை சுற்றி 4 பில்லர்கள் எழுப்பி அதில் மின்கடத்திகள் பொருத்தப்பட்டுள்ளது.
அதனால் மழை காலங்களில், இடி, மின்னல் போன்ற பிரச்சனைகள் வராது .மின்னல் வரும் போது , வீட்டிற்கும், மரத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது. இரும்பு கம்பிகள், செல்லுலோஸ் சீட்டுகள் மற்றும் பைபர்கள் கொண்டு வடிவமைக்க பட்டது. ஒவ்வொரு கிளையும், சுவரின் வழியே செல்கிறது. மரத்திற்கு தேவையான சூரிய வெளிச்சம் கிடைக்கும் மாறு வடிவமைக்கபட்டது.
லிம்கா புத்தகத்தில் இந்த வீடு இடம் பெற்றுள்ளது. மேலும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காண வேலைகள் நடைபெறுகிறது. சுற்றுலா ஆர்வலர்கள் தொடர்ந்து வீட்டை சுற்றி பார்த்து, சுற்றுசூழல், முக்கியத்துவத்தையும், கட்டிடக்கலை அமைப்பையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்