Treatment issue: நெற்றியில் அடிப்பட்ட சிறுவன்: அறுவை சிகிச்சைக்கு பதில் ஃபெவிக்விக் - வசமாக சிக்கிய மருத்துவர்!
தெலங்கானாவில் நெற்றியில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவிக்விக் வைத்து ஒட்டிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
தெலங்கானாவில் நெற்றியில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிகுவிக் வைத்து ஒட்டிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் லிங்கசூகூரைச் சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. இவர் தன் 7 வயது மகன் மற்றும் மனைவியுடன் தெலங்கானா மாநிலம் அய்சாவுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டுள்ளது. உடனடியாக வம்சி தன் மகனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கிருந்த மருத்துவர் அடிபட்ட நெற்றியில் தையல் போடாமல் உடைந்த பொருட்களை ஒட்டப் பயன்படுத்தும், ஃபெவிக்விக்கைத் தடவியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வம்சி கிருஷ்ணா மகனை வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு பிரணவை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கண் புருவத்தை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பெவிகுயிக் அகற்றப்பட்டது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்குள்ள மருத்துவர் மற்றும் உதவியாளர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் போலி மருத்துவர்களை பற்றிய செய்திகள் அதிகமாக வெளியாகின்றன. இந்நிலையில் சிறுவனுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை முறை கேட்பவர்களை அச்சத்தில் உறைந்து போக செய்வதாக உள்ளது. அண்மையில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் ஒன்றில் தமிழகத்தில் 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே போலி மருத்துவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், “இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு படிக்காமல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.