மேலும் அறிய

Train Accident: ஆந்திராவில் தடம் புரண்ட ரயில்; 9 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி - கோர சம்பவம்

தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் அமைந்துள்ளது விஜயநகரம் மாவட்டம். இங்கு இன்று விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா வரை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில், ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த பயணிகள் ரயில் கொத்தவலசா அருகே வந்தபோது திடீரென தடம் புரண்டது. இந்த பயணிகள் ரயில் தடம்புரண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விரைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் விபத்து சம்பவம் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். விரைவான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், ”என்று CMO X இல் (முன்னர் ட்விட்டர்) பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் இருந்து முடிந்தவரை ஆம்புலன்ஸ்களை அனுப்பவும் , அருகிலுள்ள மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்யுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார். சம்பவம் தொடர்பான விவரங்களை அவருக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் - பலாசா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் - ரகடா பயணிகள் ரயிலுக்கு இடையே பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் சிக்கி, 10 பேர் காயமடைந்தனர். 

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ஹெல்ப்லைன் எண்கள்:

ரயில்வே எண் 83003; 83004; 83005; 83006

பிஎஸ்என்எல் லேண்ட் லைன் எண்: 08912746330; 08912744619

ஏர்டெல்: 8106053051; 8106053052

196760676016760: 8500041670; 8500041671

புவனேஸ்வர் - 0674-2301625, 2301525, 2303069

வால்டேர் - 0891- 2885914

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget