Student Dead : கனடாவில் படித்த இந்திய மாணவி... நீர்வீழ்ச்சிக்கு சென்ற போது குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு..!
கனடாவில் படித்து வந்த இந்திய மாணவி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற போது குழியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தில் வசித்து சேர்ந்தவர் பூனம்தீப் கவுர். இவருக்கு வயது 21. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படிப்புக்கான விசாவில் கனடா நாட்டுக்கு சென்று, தங்கி தனது படித்து வந்தார்.
இவரது தந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா நகருக்கு வேலைக்காக சென்று உள்ளார். பல ஆண்டுகளாக அந்நாட்டிலேயே அவர் பணியாற்றி வந்த நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடாவில் உள்ள புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிக்கு பூனம்தீப் கவுர் தனது நண்பர்களுடன் சென்று உள்ளார். இந்த நீர்வீழ்ச்சியானது சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் சுற்றுலாவாசிகள் வருகை தருவது வழக்கம். இருந்த போதிலும் இந்த நீர்வீழ்ச்சியில் பலர் விழுந்து உயிரிழந்த சம்பவங்களும் கடந்த காலங்களில் நடந்ததுண்டு.
இந்த நிலையில், பூனம்தீப் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று உள்ளார். அப்போது பூனம்தீப் கவுர் திடீரென ஆழமான குழி ஒன்றில் தவறி விழுந்து உள்ளார். இதனை கண்ட அவருடன் சென்ற நண்பர்கள் பதறி உள்ளனர். ஆனால், அவரை காப்பாற்ற முடியாத நிலையில் பூனம்தீப் உயிரிழந்து விட்டார். இந்த தகவல் தூதரகம் வழியே பூனம்தீப்பின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் மீட்கப்பட்டு விட்டதா? இல்லையா? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க