(Source: ECI/ABP News/ABP Majha)
Odisha Train Accident: ”மின்னணு இண்டர்லாக்கிங் தான் ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம்” - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
சிக்னல் தொடர்பான மின்னணு இண்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டதாக, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
சிக்னல் தொடர்பான மின்னணு இண்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டதாக, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு:
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக நடந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 290-ஐ கடந்துள்ளது. இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. வரும் புதன்கிழமைக்குள் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவையை தொடங்கும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணன் நேரில் பார்வையிட்டார். அப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
”இண்டர்லாக்கிங் முறையே காரணம்”
ஆய்வுப்பணிகளை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் “ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். அது முடிவடைந்து விசாரணை அறிக்கை வந்து சேரட்டும். முன்னதாக விபத்திற்கான காரணம் என்ன, காரணமானவர்கள் யார் என்ன என்பது குறித்து கண்டறிந்துள்ளோம். ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம். தற்போதைக்கு இந்த பாதையில் போக்குவரத்தை சீர் செய்வது தான் எங்களது முக்கிய நோக்கமாக உள்ளது.இன்றோடு ரயில் தடத்தை சீரமைத்து புதன்கிழமை அன்று மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பிரதமர் மோடி சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளார். கவாச் பாதுகாப்பு அம்சத்தை குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது இருந்திருந்தால் கூட விபத்தை தவிர்த்து இருக்க முடியாது. அதோடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சொன்னவை எதுவும் விபத்திற்கு காரணமில்லை” எனவும் விளக்கமளித்துள்ளார்.
சிக்னல் கோளாறு காரணமா?
முன்னதாக ”சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக அதை திரும்பப் பெறப்பட்டுள்ளது. மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் உடனடியாக சிக்னல் ரத்து செய்யப்பட்டதால் அவசர கதியில் லூப் லைனுக்கு சென்றபோது, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிவேகமாக சென்ற கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்த நிகழ்விற்கு முன்னதாகவே ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலானது தடம்புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக விபத்திற்கு மனித பிழைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது” என கூறப்பட்டது. இந்நிலையில் தான் மின்னணு இண்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விபத்து ஏற்பட்டதாக, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.