• 41 தொழிலாளர்களை மீட்க 6 திட்டங்கள்.. நிபுணர்களின் கணிப்புகளில் எது சாத்தியமாகும்..?


கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக உத்தரகாசி சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுடன் இந்த மீட்பு பணிகள் 16வது நாளை கடந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. நேற்று புதிய முயற்சியாக மீட்பு பணிகளிலும் ஈடுபடும் அதிகாரிகள் சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணியை தொடங்கியுள்ளனர். முதல் நாளான நேற்று சுமார் 20 மீட்டர் வரை துளையிடும் பணி நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களை மீட்க போடப்பட்ட 6 திட்டங்களில் செங்குத்து துளையிடுதலும் ஒன்றாகும். மேலும் படிக்க..



  • நான்காவது முறையாக திருப்பதிக்கு வருகை! ஏழுமலையானை தரிசித்த பிரதமர் நரேந்திர மோடி


5 மாநில சட்டசபை தேர்தலின் தொடர்ச்சியாக தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானாவை தவிர பிற நான்கு மாநிலங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. தற்போது தெலுங்கானாவில் அடுத்ததாக சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் மோடி நவம்பர் 25, 26, 27 (இன்று) ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் படிக்க..



  • சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் - தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை


சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான, தொடக்க டிக்கெட் விலை ஆயிரத்து 699 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் கார்களை பார்ப்பது என்பதில் அனைவருக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இது தான் ஃபார்முலா பந்தயங்களாக நடத்தப்படுகிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் நடைபெறும் இந்த போட்டிகளை தொலைக்காட்சிகளில் தான் இந்தியர்களால் காண முடியும். இந்நிலையில் தான் இந்திய கார் பந்தய ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயம் நடைபெற உள்ளது. டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளின் விற்பனையும் தற்போது தொடங்கியுள்ளது. மேலும் படிக்க..



  •  இந்தியா மட்டும் எங்க நாட்டுக்கு வரலன்னா அவ்வளவுதான்.. ஐசிசியிடம் கறார் காட்டிய பாகிஸ்தான்


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் ஹோஸ்டிங் உரிமையை இழக்கக்கூடும் அல்லது சில விளையாட்டுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படலாம் என்று ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ நடத்தும் நாடு பாகிஸ்தான் என ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்னும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் சாம்பியன்ஸ் டிராபியை ஹோஸ்டிங் செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை. இந்த போட்டியை பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு எந்த நாட்டிலும் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் படிக்க..



  • வந்தது நல்ல சேதி..! இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு


காஸா பகுதியில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேலும் பல பணயக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று, பாலஸ்தீனிய குழு மற்றும் கத்தாரைச் சேர்ந்த மத்தியஸ்தர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க..