அரசு முறை பயணமாக வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று கரீபியன் தீவு நாடான ட்ரினிடாட் அண்டு டொபாகோவிற்கு சென்ற நிலையில், அந்நாட்டின் உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பிரதமருக்கு ‘தி ஆர்டர் ஆஃப் தி ட்ரினிடாட் அண்டு டொபாகோ‘ விருது

பிரதமர் மோடி, அரசு முறை சுற்றுப் பயணமாக கானா, ட்ரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி நேற்று கானாவிற்கு சென்ற அவர், இன்று கரீபியன் துவு நாடான ட்ரினிடாட் அண்டு டொபாகோ நாட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அவர், அந்நாட்டு பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சரை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

Continues below advertisement

பின்னர், பிரதமர் மோடிக்கு ட்ரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ட்ரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு‘ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்த விருதை 140 கோடி இந்தியர்களின் சார்பாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

கானாவின் உயரிய விருதை பெற்ற மோடி

முன்னதாக, நேற்று கானா சென்றிருந்த மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கானா சென்ற பிரதமரை விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் மஹாமா வரவேற்றார். அங்கு, இந்திய பிரதமரை கவுரவிக்கும் விதமாக, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, ராணுவ அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 30 வருடங்களில், கானா நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார் மோடி. அவரை பார்க்க உற்சாகமாக திரண்ட கானாவில் வசிக்கும் இந்தியர்கள், மோடியின் பெயரை ஆரவாரமாக கோஷமிட்டு அவரை வரவேற்றனர். மேலும், இந்தியர்களை நோக்கி கையசைத்து, வரவேற்பை ஏற்றுக் கொண்டார் மோடியை, ‘ஹரே கிருஷ்ணா‘ பாடலை பாடி வரவேற்றனர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்வில், பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருதான ஆபிஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கானா அதிபர் ஜான் தர்மனி மஹாமா விருதை பிரமர் மோடிக்கு வழங்கினார்.

தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும், முதலீடுகள், சுகாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, திறன் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய விஷயங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளனர். அதன் பின்னர், அங்கு பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று ட்ரினிடாட் அண்டு டொபாகோ நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி.