கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக உத்தரகாசி சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுடன் இந்த மீட்பு பணிகள் 16வது நாளை கடந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. நேற்று புதிய முயற்சியாக மீட்பு பணிகளிலும் ஈடுபடும் அதிகாரிகள் சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணியை தொடங்கியுள்ளனர். முதல் நாளான நேற்று சுமார் 20 மீட்டர் வரை துளையிடும் பணி நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களை மீட்க போடப்பட்ட 6 திட்டங்களில் செங்குத்து துளையிடுதலும் ஒன்றாகும்.
இந்தநிலையில், தொழிலாளர்களை மீட்க நிபுணர்கள் போட்டுள்ள 6 திட்டங்கள் என்னவென்று இங்கே பார்க்கலாம்..
திட்டம் 1:
பழுந்தடைந்த ஆகர் இயந்திரத்தின் உடைந்த பாகங்கள் வெளியே எடுத்தப்பிறகு, தொழிலாளர்களை கொண்டு கைமுறையாக துளையிடும் திட்டத்தை பயன்படுத்த இருக்கின்றன. இந்த திட்டத்தையே மீட்பு பணி அதிகாரிகளும் சிறந்ததாக கருதுகின்றனர். ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முழுமையாக அகற்றப்பட்டவுடன், மீதியுள்ள 10 முதல் 12 மீட்டர் இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் கையால் துளையிட்டு அகற்றுவார்கள். ஒரு குறுகிய இடத்திற்குள் இந்த கையால் நடத்தப்படும் உடைப்பு பணியில், ஆஜர் இயந்திரத்தினால் ஏற்கனவே போடப்பட்ட துளைக்குள் சென்று கைகளால் துளையிடுவார். பின்னே செல்லும் மற்ற தொழிலாளர்கள் ஒரு கப்பி மூலம் குப்பைகளை வெளியே அனுப்புவர். ஆனால், இந்த கைகளால் துளையிடும் பணி அதிக நேரம் எடுக்கும் என தெரிகிறது. இன்று இரவுக்குள் உடைந்த பாகங்கள் வெளியே எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டம் 2:
செங்குத்து துளையிடுதலின் திட்டம் இரண்டு ஏற்கனவே தொடங்கப்பட்டு 86 மீட்டர் இலக்கில் 20 மீட்டர் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த மீட்பு பணிகளில் சட்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த செங்குத்து துளையிடுதல் மட்டும் வெற்றியடைந்தால், தொழிலாளர்கள் ஒவ்வொருவராக கிரேன் மூலம் ராட்டினத்தை பயன்படுத்தி மேலே தூக்கப்படுவார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, இது இரண்டாவது சிறந்த வழியாக கணக்கிடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சென்றடைய ஏற்கனவே 19. 2 மீட்டர் துளை போடப்பட்ட நிலையில், இன்னும் 86 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி மீதம் இருக்கிறது. இந்த பணிகள் முழுமையடைய இன்னும் 4 நாட்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது.
திட்டம் 3:
மீட்புக்குழுவினரின் மூன்றாவது திட்டம், மறு பக்கத்தின் பக்கவாட்டில் துளையிடுவதுதான். ஆனால் அதற்குத் தேவையான உபகரணங்கள் அந்த இடத்தை அடையாததால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
திட்டம் 4:
சுரங்கப்பாதையின் பார்கோட் முனையிலிருந்தும் தோண்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 10 மீட்டர் தோண்டும் பணி நடந்துள்ளது. இக்கரையில் இருந்து மொத்தம் 483 மீட்டர் தோண்டும் பணி நடைபெற 40 நாட்கள் ஆகலாம் என்றும், இது மாற்று வழியாகவே இந்த தோண்டும் பணி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
திட்டம் 5:
சுரங்கப்பாதையின் பர்கோட் பக்கத்தில் நேற்று காலை குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், 10-12 மீட்டர் பரப்பளவு வரை தோண்டப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், இது சற்று ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.
திட்டம் 6:
லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் (ஓய்வு) 6வது திட்டத்தில் சுரங்கப்பாதையின் பக்கங்களை உடைத்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ராணுவப் பொறியாளர்கள் உதவி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.