மேலும் அறிய

Morning Headlines July 22: மணிப்பூர் கொடூரம்; ராஜஸ்தான் அமைச்சர் அதிரடி நீக்கம் - முக்கிய செய்திகள் இதோ!

Morning Headlines July 22: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.

Morning Headlines July 22: 

Manipur Violence: மணிப்பூரில் இரண்டு பெண்களை நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை கிளிப்பிய நிலையில், அதேபோன்று மற்றொரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைள மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. மேலும், அவர்களை அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..

 ”மணிப்பூர் விவகாரம்.. நாடாளுமன்றத்தில் இன்றைக்கே பேசணும்” - எம்.பிக்களால் குவியும் மனுக்கள்

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என, எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.எதிர்கட்சிகளை சேர்ந்த பல்வேறு எம்.பிக்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரத்தை உடனடியாக விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கி வருகின்றனர்.காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்,ரஞ்சீத் ரஞ்சன் , சக்திசிங் கோஹில், டாக்டர் சையத் நசீர் ஹுசைன் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் மற்றும் அலுவல் தொடர்பான நோட்டிஸ் வழங்கியுள்ளனர். திமுக எம்பி திருச்சி சிவா அலுவல் தடை நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதேபோன்று, ஆம் ஆத்மி மற்றும் பிஆர்எஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் வழங்கியுள்ளனர்.மேலும் வாசிக்க.

மே.வங்க முதல்வரை கொல்ல முயற்சியா?

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்குள் நுழைய மர்ம நபர் ஒருவர் முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா காளிகாட்டில் உள்ள மம்தாவின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைய அவர் முயற்சித்திருக்கிறார்.கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல், "ஷேக் நூர் ஆலம் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், மம்தா பானர்ஜியின் குடியிருப்புக்கு அருகிலுள்ள பாதையில் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.அந்த நபரிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி மற்றும் பல்வேறு ஏஜென்சிகளின் பல அடையாள அட்டைகள், கடத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் அவர் வந்துள்ளார். காவல்துறை, சிறப்பு காவல் படை மற்றும் சிறப்புப் பிரிவினர் அவரை உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்" என்றார்.மேலும் வாசிக்க..

இந்திய மீனவர்கள் கைது விவகாரம்..

இரண்டு நாள்களுக்கு அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். கடந்தாண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து முதல்முறையாக முதல்முறையாக இலங்கை அதிபர் இந்தியா வந்துள்ளார். இதுகுறித்து வெளிவிவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்த ஆண்டு இரு நாடுகளும் 75 ஆண்டுகால தூதரக உறவை கொண்டாடும் சமயத்தில், ​இந்தியா-இலங்கை உறவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி நீண்ட கால உறவை வேகமாக முன்னெடுத்து செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மின்சார பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்புகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களுடனான உறவுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது" என்றார். மேலும் வாசிக்க.

வாய திறங்க செலிப்ரிட்டீஸ்..! மணிப்பூர் கொடூரம்.. 

மணிப்பூர் விவகாரத்தில் சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளை சேர்ந்த, எந்த ஒரு முக்கிய பிரபலமும் இதுவரை வெளிப்படையாக பேசாதது சமூக வலைதலங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.  அனைத்து விவகாரங்களிலும் சினிமா மற்றும் விளையாட்டு துறைகளை சேர்ந்த நட்சத்திரங்கள் கருத்து சொல்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்து விடும் என இங்கு கூறவில்லை. அந்த பிரபலங்கள் பேசுவதன் மூலம், மக்களிடையே அதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் விவாதம் அதிகரிக்கும். இதன் மூலம் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்காகவாவது,  அரசு இயந்திரம் விரைந்து செயல்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதே ஒரே நோக்கம்.மேலும் வாசிக்க..

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு.. 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று முன்தினம்  இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 40 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பழங்குடியின கிராமத்தின் பல வீடுகள் அமைந்துள்ள காலாபூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை 16 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் வாசிக்க..

மணிப்பூர் விவகாரம்.. ராஜஸ்தான் அமைச்சர் அதிரடி நீக்கம் - நடந்தது என்ன?

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் மணிப்பூர் விவகாரம் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த வன்முறை விவகாரம் ராஜஸ்தான் சட்டசபையில் பேசுபொருளானது. நேற்று (21,ஜூலை, 2023) நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சர் (Minister of state (MoS) for Sainik Kalyan, Home Guard and Civil Defence, Panchayati Raj, and Rural Development) ராஜேந்திர குதா (Rajendra Gudha) பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வாசிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget