மேலும் அறிய
Top 10 News Headlines: கோர தாண்டவமாடும் டிட்வா புயல்.. சபரிமலைக்கு சிறப்பு பேருந்து.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines Today Nov 29: இந்தியா முழுவதிலும் நவம்பர் 29ம் தேதியான காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இன்றைய முக்கிய செய்திகள்
Source : ABPLIVE AI
- சென்னையிலிருந்து 400 கி.மீ., தொலைவில் டிட்வா புயல் நிலை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- டிட்வா புயல் காரணமாக 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- டிட்வா புயல் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள இலங்கையில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் பொதுத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.,க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயயத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.95,840க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி இன்று சவரன் ரூ.1,120 ஆக உயர்ந்துள்ளது, கிராம் ரூ.140க்கு அதிகரித்துள்ளது.
- சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தென்காசி, கோவை,மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
- டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆபரேஷன் சாகர் பந்து என்ற பெயரில் 12 டன் உணவு, தார்ப்பாய் போன்ற நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்தது.
- சீனா அரசு வியட்நாம் எல்லைப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்த 500 ரோபோக்களை களமிறக்கியுள்ளது. ஏற்கனவே ரோபோ நாய்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்
- 2026ம் ஆண்டுக்கான மகளிர் பிரிமீயர் லீக் போட்டியானது ஜனவரி 9ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. நவி மும்பை டிஒய் பாட்டில் மற்றும் வதோதரா மைதானத்தில் தலா 11 போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















