மேலும் அறிய
Top 10 News Headlines: தீவிரமடையும் பருவமழை.. இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines Today November 18th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இன்றைய முக்கிய செய்திகள்
Source : ABPLIVE AI
- தமிழ்நாட்டில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக பணி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை குறைத்திட வலியுறுத்தியுள்ளது.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தொடர் மழை காரணமாக திருப்பூர் உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிப்பேருந்து மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் பின்புறம் குழந்தை இருந்ததை அறியாமல் பேருந்தை ஓட்டுநர் ரிவர்ஸ் எடுத்தபோது விபரீதம் நிகழ்ந்துள்ளது.
- வன்முறைகளுக்கு முக்கியத்துவம் தராமல் படம் எடுக்க முடியாதா என இயக்குநர்களுக்கு விசிக தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இயக்குநர்கள் மாற்றி சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.140 குறைந்து ரூ.11,400க்கும், ஒரு சவரன் ரூ.91,2000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
- பீகார் மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் அவரது கட்சி 143 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களில் வென்றது.
- டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அல் பலா பல்கலைக்கழகங்களுக்கு தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத்துறை பலத்த பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகிறது.
- இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 34 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கான வரியை கூடுதலாக 500% உயர்த்தப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான மசோதா கொண்டு வரப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.
- தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒருதலைப்பட்சமானது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக அரசியல் ரீதியாக தொடுக்கப்பட்ட வழக்கு இது எனவும் கூறியுள்ளார்.
- பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலால் இலங்கை வீரர்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் அங்கு விளையாட சென்றுள்ள அவர்கள் நாடு திரும்ப கேட்டுக் கொண்டனர். ஆனால் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும். அதையும் மீறி நாடு திரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்நிலையில் இலங்கை கேப்டன் சாரித் அசலங்கா நாடு திரும்பவுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















