Top 10 News Headlines: ஸ்டாலின் அறிவுரை, கூலி ஆடியோ லாஞ்ச், இந்திய அணிக்கு புது கோச் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Aug 2nd : இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை
“மருத்துவமனைக்கு வருவோரை மருத்துவர்கள், மருத்துவப் பயனாளிகளாகவே பார்க்க வேண்டும், நோயாளிகளாக பார்க்கக் கூடாது. கல்வியும், மருத்துவமும் இந்த ஆட்சியின் 2 கண்கள். கல்விக்கு வழங்கும் அதே அளவு நிதி மருத்துவத்திற்கும் வழங்குகிறோம்" - நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
அதிமுக திட்டவட்டம்
“தனித்து ஆட்சி, இபிஎஸ்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை ஏற்று யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். 200க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டணியாக வெல்வோம்”
-பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்
எகிறிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 9 ஆயிரத்து 290 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று கூலி ஆடியோ லாஞ்ச்
'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. படத்தின் ட்ரெய்லர் மாலை 7 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மேடைப் பேச்சை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!
அனில் அம்பானிக்கு சம்மன்
வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு வரும் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன். அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ரேவண்ணாவிற்கு தண்டனை என்ன?
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது சிறப்பு நீதிமன்றம். வீட்டில் பணியாற்றிய பெண்ணை வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆளுநருடன் மோதல்
கேரளாவில் பல்கலை. துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வராத் ஆர்லேகருக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கு இடையே மீண்டும் மோதல் போக்கு!
முதலமைச்சரை ஆலோசிக்காமல், 2 பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணைவேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படியே நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம்.
டெஸ்லா விபத்து - ரூ.2,119 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
`
அமெரிக்காவில் 2019ம் ஆண்டு Auto-Pilot மோடில் இயக்கப்பட்ட டெஸ்லா கார் மோதி இளம் பெண் உயிரிழந்த வழக்கில், அப்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2,119 கோடி இழப்பீடாக வழங்க டெஸ்லா நிறுவனத்துக்கு ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவு. விபத்துக்கு ஓட்டுநர் பொறுபேற்றுகொண்டாலும், நிறுவனம் மீது பழிசுமத்தப்படுகிறது என டெஸ்லா தரப்பு வாதம்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்
ஓவல் டெஸ்ட்டில் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்தை விட 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. ஜெய்ஸ்வால் (51) மற்றும் ஆகாஷ் தீப் (4) களத்தில் உள்ளனர்.
இந்திய கால்பந்து அணிக்கு புதிய HEAD COACH
இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக காலித் ஜமில் நியமனம்.
வரும் 29ம் தேதி தொடங்கும் மத்திய ஆசியாவின் நேஷன்ஸ் கோப்பை தொடரில் இருந்து அணியை வழிநடத்துகிறார்.





















