Top 10 News Headlines: ”சாரிமா மாடல் ஆட்சி” திமுக மீது விஜய் அட்டாக், கங்கனா ரனாவத் வேதனை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today July 13: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

சாரி வேண்டாம் முதலமைச்சர் சார் - விஜய்
காவல் நிலைய மரணங்ளை கண்டித்து தவெக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. இதில், கருப்பு சட்டை அணிந்து 'சாரி வேண்டாம், நீதி வேண்டும்' என்ற பதாகையை ஏந்தியபடி கலந்து கொண்டுள்ளார் தவெக தலைவர் விஜய்!
திருவள்ளூரில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயில் தீ விபத்தால் விண்ணை முட்டும் கரும்புகை. 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், 18 பெட்டிகள் தீயில் சேதம் எனவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, விபத்தால் ரயில்சேவை பாதிக்கப்பட்டதால் திருவள்ளூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருடன், ஒரு படகையும் சிறைபிடித்து இலங்கை கடற்படை அராஜகம். மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை மீனவர்களை மன உளைச்சலுக்கு தள்ளியுள்ளது.
தூத்துக்குடி கார்களுக்கு முன்பதிவு
தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் உற்பத்தி நிலையத்தில் புதிய கார் விற்பனைக்கான முன்பதிவு ஜூலை 15ல் தொடங்குகிறது.. கடந்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி ஆலை அமைக்கும் பணிக்காக அடிக்கல் நாட்டி இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நியமன எம்.பிக்கள் அறிவிப்பு
மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதில் மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக), வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, முன்னாள் ஆசிரியர் சதானந்தன் மாஸ்டர் (பாஜக) மற்றும் வரலாற்று ஆய்வாளர் மீனாக்ஷி ஜெயின் ஆகியோர் நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
நடிகர் கோட்டா சீனிவாசன் (83) உடல் நலக்குறைவால் காலமானார். தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரமின் சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
கங்கனா ரனாவத் வேதனை
"எம்பி-யானால் வருடத்தில் 60 முதல் 70 நாள்கள் மட்டும் வேலை இருக்கும் என்றும், அப்போது மட்டும் பாராளுமன்றத்துக்கு வந்தால் போதும் என்றும் சிலர் எனக்கு வாக்களித்தனர். மற்ற நாட்களில் நீங்கள் வேறு வேலைகளைப் பார்க்கலாம் என்றனர், ஆனால் நான் நினைத்ததைவிட வேலை அதிகமாக இருக்கிறது” - எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத்
ஜியோ கொடுத்த ஆஃபர்
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய மேட்சிங் எண் தேர்வு முயற்சி; உங்களின் விருப்ப எண்ணை பெற வழக்கமாக செலுத்தும் ரூ.500-க்கு பதிலாக ரூ.50 செலுத்தி தனிப்பயனாக்கப்பட்ட மொபைல் எண் வரிசையைத் தேர்வு செய்யலாம்
சுப்மன் கில் ஆவேசம்
லார்ட்ஸ் டெஸ்ட்: மூன்றாவது நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய கேப்டன் சுப்மன் கில். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
விம்பிள்டன் சாம்பியன்
விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக். இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அனிசிமோவாவை 6-0, 6-0 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் போலாந்து வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.




















