Top 10 News: தமிழ்நாட்டு பெண்கள் தான் டாப், புத்தாண்டில் உருவெடுக்கவுள்ள புதிய தலைமுறை- டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
தமிழ்நாட்டு பெண்கள் தான் டாப் - முதலமைச்சர் ஸ்டாலின்
தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இத்தனை மாணவர்களை பார்ப்பதில் Dravidian Stock-ஆக பெருமை கொள்கிறேன். இதற்கு மாறக ஒரு Stock உள்ளது. சாதி, மத உணர்வுகளை தூண்டும் வன்மம் பிடித்த Stock. மதிப்பெண்கள் பெறுவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப்” என பேசினார்.
அண்ணா பல்கலை., மகளிர் ஆணையம் விசாரணை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய குழு இன்று விசாரணை நடத்த உள்ளது. ஆணையத்தின் உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் நேரில் வந்து விசாரிக்க உள்ளனர். மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் பாதுகாப்பு குறைபாடாக விளங்கக்கூடியவை எவை என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
மாணவிகளுக்கு விஜய் கடிதம்
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதத்தில், “எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே அதை பற்றியும் கவலை கொல்லாமல் கல்வியில் கவனம் செலுத்துஙகள்” என வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் இன்று திறப்பு!
கன்னியாகுமரியில் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ரூ.37 கோடி செலவில் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி - 1,00,008 வடை மாலை
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்! கோயில் பிரகாரம் முழுவதும் 2 டன் அளவு எடைக்கு பல்வேறு வகையான வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது PSLV-C60 ராக்கெட். 220 கிலோ எடையிலான 2 சிறிய ரக செயற்கைக்கோள்களை பூமியிலிருந்து 470 கி.மீ தொலைவில் வெவ்வேறு சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தத் திட்டம். 2 செயற்கைக் கோள்களும் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் முறையில் ஒன்றிணைக்கப்பட உள்ளன.
புத்தாண்டில் உருவெடுக்கவுள்ள புதிய தலைமுறை
2025 ஜன. 1 முதல் Gen-Beta எனும் புதிய தலைமுறை உருவெடுக்கவுள்ளது. 2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் இப்படி அழைக்கப்படுவர். இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பர். வரும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA-ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் காலமானார்
அமெரிக்கவின் 39வது அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், 100 வயதில் காலமானார். 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக இருந்த இவர், 2002-ல் அமைதிக்கான 'நோபல் பரிசு' வென்றார். தனது பதவிக் காலத்திற்குப் பிறகு மற்ற அமெரிக்க அதிபர்களை விட நீண்ட காலம் வாழ்ந்தவர் ஆவார்
தடுமாற்றத்தில் இந்தியா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. 340 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, தற்போது வரை 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
வரலாறு படைத்த AUS vs IND போட்டி
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்டை பார்க்க மெல்போன் மைதானத்திற்கு 3.51 லட்சம் ரசிகர்கள் வருகை. 1936 - 37 ஆஷஸ் தொடருக்குப் பிறகு MCG யில் அதிக அளவில் கூடிய ரசிகர்கள்