மேலும் அறிய
Advertisement
TOP 10 News: செந்தில் பாலாஜிக்கு ஜாமின்! மும்பையில் இன்று ரெட் அலர்ட்! பரபரப்பான சம்பவங்கள் இதுதான்!
Top 10 News: காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது
- 471 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியில் வரும் செந்தில் பாலாஜியை வரவேற்க குவிந்த தொண்டர்கள்
- சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால் கோயம்பேடு, ராயப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் தேங்கிய நீர் வடியாததால் வாகன ஓட்டிகள் அவதி
- பெரம்பூரில் சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றப்பட்டதால் தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
- சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த காரணத்தால் 35 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது
- கனமழை காரணமாக சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு
- மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் மழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் தேங்கியுள்ளது – மும்பை மாநகருக்கு இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது தமிழக அரசு
- தமிழ்நாட்டில் அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு
- விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
- பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி. ரவீந்திரநாத்தை அதிரடியாக கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்
- சென்னையில் ரயில் நிலையங்களுக்கு அருகில் இயங்கும் 39 டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய டாஸ்மாக் நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம்
- கைதிகளை கொடுமைப்படுத்திய வழக்கு; வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
- வங்கதேசத்தில் உறவினரை கொலை செய்து விட்டு திருப்பூரில் தங்கியிருந்த இளைஞர் உள்பட 3 பேர் கைது
- செங்கல்பட்டு அருகே 7 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விவகாரம் – பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார்
- கும்பகோணத்தில் நவக்கிரக கோயில்களை இணைக்க தேசிய நெடுஞ்சாலை அமைக்க வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
- திண்டுக்கல் அய்யம்பாளையம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் சடையாண்டி கோயில் திருவிழா – விடிய விடிய கறிவிருந்து
- சாதி, மதங்களை கடந்து பன்முகத்தன்மையை மதிக்கும் நாடாக இலங்கையை மாற்றுவோம் – புதிய அதிபர் திசநாயகே
- இலங்கையின் 3 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் – அதிபர் திசநாயகே
- லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனே வெளியேற உத்தரவு – மத்திய அரசு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion