(Source: ECI/ABP News/ABP Majha)
Top 10 News: ரூ.10 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள், 15 வயது சிறுமி நாடகம்- டாப் 10 செய்திகள்!
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
”எல்லையைக் காத்த மாவீரர்கள்” - முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1! தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி கொண்டாட்டம் - பொதுமக்கள் உற்சாகம்
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் குடும்பத்துடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். இதனிடையே, சென்னையில் பட்டாசுகள் காரணமாக காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. தொடர் விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
15 வயது சிறுமி நாடகம்:
சென்னை பெரும்பாக்கத்தில் வீடு புகுந்து மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக 15 வயது பள்ளி மாணவி நாடகமாடியது விசாரணையில் அம்பலம். இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரை வீட்டுக்கு வரவழைத்த போது, பாலியல் வன்கொடுமை நடந்தது விசாரணையில் அம்பலம். கானா தினேஷ் என்ற கானா பாடகர் கைது.
வணிக சிலிண்டர் விலை
சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டரின் விலை 61 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, அயிரத்து 964 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டரின் விலை 155 ரூபாய் அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகளாக தொடர்கிறது.
டெல்லி, மும்பையில் காற்றின் தரம் மோசம்
தீபாவளியை கொண்டாடும் வகையில் வட இந்தியாவிலும், பொதுமக்கள் அதிகளவில் பட்டாசுகளை கொண்டாடினர். இதனால், கொல்கத்தா, மும்பை மற்றும் ஜெய்பூர் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் ஆனந்த் விஹார் பகுதியில் அதிகபட்சமாக காற்றின் தரம் 396-ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ரூ.10 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் - 2 பேர் கைது
அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் தில்லை டினிஅலி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டு இருந்தனர். அப்பொது சோதிக்கப்பட்ட ஒரு வாகனத்தில் பண்டல்களில் தடைசெய்யப்பட்ட மெத்தபெட்டமின் என்ற போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 25 பண்டல்களில் இருந்த 50 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு:
ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு நடைபெற உள்ள மெகா ஏலத்திற்கு முன்பாக, ஒவ்வோரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.. அதன்படி, 10 அணிகளும் சேர்ந்து 28 பேட்ஸ்மேன்கள், 11 பந்துவீச்சாளர்கள் மற்றும் 7 ஆல்-ரவுண்டர்கள் என 46 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி பேட்டிங்:
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது.