இந்த அரிதான பறவைகள் இந்தியாவில் மட்டும்தான் இருக்குமாம்!!

Published by: ABP NADU
Image Source: X

பல அரிதான, தனித்துவமான பறவைகள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறன.

அவற்றில் சில வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் போன்ற பல காரணங்களால் அழிந்து வருகின்றன.

கானமயில்

1500 முதல் 2000 என்ற எண்ணிக்கையில் இருந்த இந்த பறவை 2018-ன் கணக்கெடுப்பு படி 150-ம் குறைவாகவே காணப்படுகின்றன. வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் காரணமாக அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன.

நீலப் பைங்கிளி

தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த கிளி இனமாகும். நீளமான நில நிற வாலுடனும், அலகின் முனை மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

நீலகிரி காட்டுப் புறா

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஒரு பெரிய வகைப் புறாவாகும்.

நீலகிரி ஈப்பிடிப்பான்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் பெரிய வாலுடைய சிறிய பறவை.

நிக்கோபார் மெகாபோட் (Nicobar Megapode)

இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் பெரிய கால்களும் பாதங்களும் உடைய பழுப்பு நிற பறவை.