Top 10 News: பதவியை காப்பாற்றுமாறு துரைமுருகனிடம் கோரிக்கை, பாடையில் ஈவிஎம் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
என்னை காப்பாற்றுங்கள் - செல்வப்பெருந்தகை அமைச்சருக்கு கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மழைநீர் பணிகள் அரைகுறையாக செய்யப்பட்டுள்ளன. அதனை முழுமையாக முடிக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டுக்கொள்கிறேன். எனது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ-வாக நான தொடர்வது நீர்வளத்துறை அமைச்சர் கையில்தான் இருக்கிறது - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதில் தாமதம்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம். அடுத்த 24 மணி (11ம் தேதி காலை) நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
எகிறிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 640 ரூபாயை எட்டியுள்ளது. கிராம் தங்கத்தின் விலை 75 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 205 ரூபாயாக விற்பனை செய்யபப்டுகிறது.
முன்னாள் முதலமைச்சர் காலமானார்
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். மாநில அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையிலும் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஓய்வு பெறுகிறார் ஆர்பிஐ ஆளுநர்
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். கடந்த 2018ம் ஆண்டு இந்த பதவியை ஏற்ற அவர், 6 ஆண்டுகால பணிக்கு பிறகு இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, மத்திய அரசின் நிதித்துறையில் பணியாற்றி வரும், சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈவிஎம் மாதிரிகளை பாடைகளில் வைத்து ஊர்வலம்
மகாராஷ்டிராவில் EVM இயந்திரங்களில் முறைகேடு செய்தே, பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டி உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் நூதன போராட்டம். EVM இயந்திர மாதிரிகளை பாடைகளில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, பின்பு அதனை தீ வைத்துக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
வெளிநாடு செல்ல தென்கொரிய அதிபருக்கு தடை
தென்கொரியாவில் அவசர நிலை அறிவித்த விவகாரத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மன்னிப்பு கோரிய பிறகும் அவர் பதவி விலக வேண்டும் என, அவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் அவசர நிலை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலி
துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் வழக்கமான பயிற்சிகள் நடைபெற்றன. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதின. இதில் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில் ராணுவ ஜெனரல் உள்பட 5 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.
இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் அடிலெய்ட் பிங்க் பால் டெஸ்ட்டின் போது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் உடன் ஏற்பட்ட வார்த்தை மோதலை கண்டித்து, இந்திய வீரர் சிராஜ்க்கு அவரின் சம்பளத்தில் இருந்து 20% அபராதமாக விதித்துள்ளது ஐசிசி.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா குகேஷ்?
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 12வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி. கடந்த சுற்றில் வெற்றிபெற்று குகேஷ் முன்னிலை வகிக்க, இந்த சுற்றில் டிங் வெற்றியால் கூடுதல் ஒரு புள்ளி பெற்றதன் மூலம் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளனர். தற்போது 2 சுற்று ஆட்டங்களே எஞ்சியிருப்பதால் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.