மேலும் அறிய

சுங்கச்சாவடி கழிப்பறை சுத்தம் இல்லையா? ₹1000 இலவசம்! ஃபாஸ்டேக் பயனர்களுக்கு சூப்பர் சலுகை!

பயணிகள் இந்த சலுகையை பெறுவதற்கு Rajmargyatra என்ற செயலியை தங்களுடைய போனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் நாம் பயணம் செய்யும் போது அந்த சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனத்திற்கு சுங்க கட்டணம் செலுத்துகிறோம். தற்போது சுங்க கட்டணம் செலுத்தும் முறை பெருமளவில் மாறிவிட்டது.


சுங்கச்சாவடி கழிப்பறை சுத்தம் இல்லையா? ₹1000 இலவசம்! ஃபாஸ்டேக் பயனர்களுக்கு சூப்பர் சலுகை!

ஃபாஸ்டேக் முறையில் நம்முடைய வாகனத்தில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டிருக்கும், அது நம்முடைய வங்கிக் கணக்கோடு wallet முறையில் இணைக்கப்பட்டிருக்கும். சுங்க சாவடிகளை கடக்கும் போது தானாகவே அந்த ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு அதிலிருந்து பணம் என்பது எடுத்துக் கொள்ளப்படும். சுங்கச்சாவடிகளை நாம் கடக்கும் போது அங்கே இருக்கும் கழிப்பறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் பல்வேறு இடங்களிலும் இந்த கழிப்பறைகள் தூய்மையாக இருப்பதில்லை , அசுத்தமாகவே காணப்படுகின்றன. சுங்க கட்டணம் வசூல் செய்யும் நிறுவனங்கள் கழிப்பறைகளை முறையாக பராமரிக்கப்படுவதில்லை இதற்கு எதற்கு நாங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என ஏராளமான வாகன ஓட்டிகளும் பயணிகளும் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் clean toilet picture india challenge என்ற திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருப்பது அறிந்தால் அதனை புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும் இவ்வாறு நீங்கள் அசுத்தமான கழிப்பறைகளை எடுத்து புகைப்படம் அனுப்பும்போது உங்களுடைய ஃபாஸ்டேக் கணக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 1000 ரூபாய் ரீசார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு சுமார் 300க்கும் அதிகமானவர்கள் 1000 ரூபாய் இலவச ரீசாஜ் பெற்றனர். இந்த ஆண்டும் ஜூன் மாதம் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. பயணிகள் இந்த சலுகையை பெறுவதற்கு Rajmargyatra என்ற செயலியை தங்களுடைய போனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.


சுங்கச்சாவடி கழிப்பறை சுத்தம் இல்லையா? ₹1000 இலவசம்! ஃபாஸ்டேக் பயனர்களுக்கு சூப்பர் சலுகை!

அசுத்தமான சுங்கசாவடி கழிப்பறையை தெளிவாக படம் எடுத்து இந்த ஆப்பில் உள்ள ஜியோ டேக் செய்யப்பட்ட தகவலோடு பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களுடைய பெயர் ,இடம், வாகன பதிவு எண், மொபைல் எண் ஆகிய விவரங்களையும் உள்ளிட வேண்டும். ஒரே கழிப்பறை குறித்து பலர் புகார் அளித்தாலும் முதலில் யார் புகார் அளித்தாரோ அவருக்கு தான் இந்த 1000 ரூபாய் ரீசார்ஜ் கிடைக்கும் . போலியான மற்றும் பழைய புகைப்படங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்த புகைப்படங்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்படும். உண்மையாகவே அந்த கழிப்பறைகள் இப்படி அசுத்தமாக தான் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்யப்பட்ட பிறகு 1000 ரூபாய் சன்மானம் என்பது வழங்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் வரக்கூடிய சுங்கச்சாவடி கழிப்பறைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget