மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: காவிரியிலிருந்து நீர் திறப்பு..குஜராத்தில் வெள்ளம்.. முதல் ஒருநாள் போட்டி...பல செய்திகள்...!
காவிரியிலிருந்து 1.10 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு:
- காவிரியிலிருந்து 1.10 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- அதிமுகவின் கட்சி அலுவலகம் தொடர்பாக வரும் 25ஆம் தேதி விளக்கம் கொடுக்க காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேர் கடலில் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
- காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா இன்று நடைபெறுகிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் 2448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா:
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
- மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு வரும் 19ஆம் தேதி விசாரணை.
- குஜராத்தின் பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
- தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- டெல்லி-மும்பை இடையே தனியாக மின்பாதை அமைக்க திட்டம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
உலகம்:
- உக்ரனில் குடியிருப்பு கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இடிபாடுகளில் 25 பேருக்கு மேல் சிக்கியுள்ளதாக தகவல்.
- கிரிகிஸ்தான் நாட்டில் மழையிலிருந்து பனிச்சரிவு தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
- இலங்கையில் புதிய அதிபர் வரும் 20ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்.
- கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தகவல்.
- இலங்கை அதிபர் பதவியை கைப்பற்ற சஜித் பிரேமதாசா மும்முரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பாகிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
விளையாட்டு:
- இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிஅறிவிக்கப்பட்டுள்ளது.
- உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் பாபுதா தங்கம் வென்று அசத்தல்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion