உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள்
உலகில் துவங்கி உள்ளூர் வரை இன்றைய தினத்திற்கான முக்கிய நிகழ்வுகளின் தலைப்புச் செய்திகள் இதோ:
இன்றைய நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தலைப்பு செய்திகள்:
*மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக்கிற்கு சின்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை. அபாய கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை தகவல்.
*நடிகர் விவேக் மாரடைப்பிற்கும் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கும் தொடர்பில்லை: சுகாதார செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
*தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 449யை கடந்து உச்சம்
*தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று. இணை நோய் இல்லாத இருவர் மாரடைப்பால் மரணம்.
*தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலர் ஆலோசனை
*மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி: பக்தர்கள் பாதுகாப்பு கருதி உயர்நீதிமன்றம் மறுப்பு
*இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
*பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று துவங்கியதாக பள்ளி,கல்வித்துறை தகவல்
*வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் இருக்கும் இடத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்த திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு
*வாக்கு இயந்திரம் பைக்கில் சென்ற விவகாரத்தில் வேளச்சேரியில் நாளை வாக்குப்பதிவு. காலை 7 மணிக்கு துவக்கம்
*தமிழகத்தின் தெற்கு, மேற்கு மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை: சென்னை மேக மூட்டம் என வானிலை மையம் தகவல்
*விழுப்புரத்தில் குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: நீர் நிலைகளில் சிறுவர்கள் இறப்பது தொடர்கிறது
*மேற்கு வங்கத்தில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
*பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி