மேலும் அறிய

Today Headlines: குஜராத் பால விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு; கோவையில் என்ஐஏ சோதனை.. இன்றைய தலைப்புச் செய்திகள்

Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

  • தமிழ்நாடு : 
    கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாகை அருகே உள்ள சிக்கல் பகுதியில் முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த இருவரின் வீடுகளில் காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
  • கோவை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளும் நேற்று சோதனை நடத்தினர்.
  • வடகிழக்குப் பருவ மழையையொட்டி, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை மேற்பார்வையிட மண்டல வாரியாக செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழ்நாடு முழுவதும் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவமனைகள் வாயிலாக மருத்துவ முகாம்கள் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
  • தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான இணையதளத்தில் இதுவரை 10 ஆண்டுகளுக்கான விவாதக் குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 1921-ம் ஆண்டில் இருந்து பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் பதிவேற்றம் செய்ய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
  • புதுமைப் பெண் திட்டத்திற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்தியா

  • குஜராத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது.
  • முழு சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதி நிகழவுள்ளது. கொல்கத்தா உள்பட நமது நாட்டின் பல முக்கிய நகரங்களில் இந்த நிகழ்வைக் காண முடியும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
  • உலகின் அதி முக்கியமான உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையில் மாநில சட்டசபைகளுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான ஓ.பி.ராவத் தெரிவித்தார்.
  • தெலங்கானாவில் எனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 20-30 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்வதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், அந்த மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டினார். 

விளையாட்டு

  • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 30வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி.
  • இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆட்டத்தில் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை படைத்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி.
  • தமிழ்நாடு விளையாட்டுத் தலைநகரமாக விரைவில் மாறும் என மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
  • இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.                                                                                               உலகம்
  • தென் கொரியாவில் நடைபெற்ற "ஹேலோவீன்" தின கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 153ஆக அதிகரித்துள்ளது.
  • கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழ்ந்த இரட்டை கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆகியுள்ளது.
  • பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அவருடைய போனில் ஊடுருவி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதுகுறித்து விசாரிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
  • பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டி சில்வா வெற்றி பெற்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget