Headlines Today: கனமழைக்கு வாய்ப்பு.. அதிகரித்த சிலிண்டர் விலை.. சத்தமில்லாமல் ஏறும் கொரோனா- தலைப்பு செய்திகள்
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு
சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ 1,018 -ல் இருந்து 1,068.50 ஆக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க ஓபிஎஸ் தரப்பு மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தமிழகத்தில் மேலும் 2662 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
இந்தியா
டெல்லியில் நாளை நடைபெற இருந்த காவிரி ஆணையக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா நிசாமாபாத் கூட்டுறவு வங்கியில் 3 கோடி நகைகள் கொள்ளை - சிசிடிவி கேமாரக்களை திருடியதால் விசாரணையில் சிக்கல்
கேரளாவில் அதிக அளவில் உற்பத்தி செய்துவரும் முந்திரியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
விமானப்படையில் சேர 7.50 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மும்பையில் பெய்த கனமழை காரணமாக மின்சாரரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடு
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீன பொம்மைகள் இறக்குமதி குறைந்தது- உள்நாட்டு இறக்குமதி ஊக்குவிப்பு என மத்திய அரசு தகவல்
இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபருக்கு எதிராக எதிர்கட்சிகள் முழக்கம் - தொடர் முழக்கத்தால் அவையில் இருந்து அதிபர் வெளியேற்றம்.
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
சினிமா
திரைப்படமாகும் சக்திமான்.. ! சூப்பர் ஹீரோவாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல்
பிசிஓஎஸ் பிரச்சினை இருப்பதாக கூறிய ஸ்ருதிஹாசன் தான் நன்றாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வரும் ஆகஸ்ட் 13 -ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்