மேலும் அறிய
Today Headlines : சட்டசபை கூட்டத்தொடர் இன்று,இறுகும் கட்டுப்பாடுகள்..! விறுவிறுப்பான கட்டத்தில் தெ.ஆ. டெஸ்ட்..! - முக்கியச் செய்திகள்..
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்
- தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று : கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
- தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 731 நபர்களுக்கு கொரோனா
- சென்னையில் மட்டும் கொரோனா தினசரி பாதிப்பு 1,500 –ஐ கடந்தது
- சென்னையில் கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
- தமிழ்நாட்டில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் : அமைச்சர் மற்றும் ஆட்சியர் முக்கிய ஆலோசனை
- திண்டுக்கல்லில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : 5 துப்பாக்கிகள் பறிமுதல் மூன்று பேர் கைது
இந்தியா :
- இந்தியா முழுவதும் கடுமையாக அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு
- அண்டை மாநிலமான கர்நாடகாவில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு முடக்கம்
- மகாராஷ்ட்ராவில் தினசரி 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
- இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலைக்கான அறிகுறி – மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை
- பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
உலகம் :
- இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் : ரூபாய் 750 கோடி மதிப்பில் பொருளாதார சலுகைககள் அறிவிப்பு
- பிரான்சில் புதிய வகை கொரோனா வைரஸ் : 46 உருமாற்றங்களுடன் உருவாகியுள்ள புதிய கொரோனாவிற்கு ஐ.எச்.யூ. என்று பெயர்
- உலகின் மிகவும் பிரபலமான நிறுவனமான பிளாக்பெர்ரியின் சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது
- அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா : 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தொற்று பாதிப்பு
விளையாட்டு :
- விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டி : தென் ஆப்பிரிக்காவை 229 ரன்களில் சுருட்டியது இந்தியா
- தெ.ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தல் : 58 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தொடர்ந்து பேட்டிங்
- நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியை வென்று வரலாற்று சாதனை படைத்தது வங்கதேசம்
- பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேசம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion