மேலும் அறிய
Today Headlines: சென்னையில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்! முதல்வரின் கோரிக்கை! இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? இன்னும் பல செய்திகள்
Today Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- சென்னையில் ரூபாய் 31 ஆயிரத்து 500 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பங்கேற்பு
- தமிழ்மொழி வளர்ச்சிக்கு தேசிய கல்விக்கொள்ளை உதவும் – பிரதமர் மோடி
- மத்திய அரசு மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வருவாய் மிக மிக குறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- நீட் விலக்கு, கச்சத்தீவு மீட்புவிற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- தேசிய கல்விக்கொள்கையால் இந்தியா வலிமை பெறும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்
- பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
- பிரதமர் பங்கேற்பு விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
- திருச்சி கல்லணையில் இருந்து இன்று மாலை பாசனத்திற்கு நீர் திறப்பு
- மதுரையில் இருந்து தேனிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ரயில்
இந்தியா :
- பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை தவிர்த்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ்
- பிரதமருக்கு 17 கேள்விகள் எழுப்பி பேனர்கள் வைத்த தெலுங்கானா ஆளுங்கட்சி
- மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல்
- காஷ்மீரில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – இந்திய ராணுவம் அதிரடி
- புதுச்சேரியில் ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்
உலகம் :
- இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்சவிடம் போலீசார் தீவிர விசாரணை
- இங்கிலாந்து நாட்டின் முதல் தலித் பெண் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிதா தேர்வு
விளையாட்டு :
- ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குஜராத்துடன் மோதப்போவது யார்? ராஜஸ்தான் – பெங்களூர் பலப்பரீட்சை
- இறுதிப்போட்டிக்கு செல்வதற்காக ராஜஸ்தான் – பெங்களூர் வீரர்கள் தீவிர பயிற்சி
- ஆசிய கோப்பை ஹாக்கி : இந்தோனேஷியாவை 16-0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்தியா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion